தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juni 2015

அவளுக்காக தான் அவனை வெட்டிக் கொலைசெய்தேன்: ஆட்டோ ஓட்டும் நண்பனின் அதிர்ச்சி

”சேர்… மேல­திக வகுப்­புக்குச் சென்ற மகனை காண­வில்லை சேர்…. எனக்­குள்ள ஒரே மகன் சேர்…. எப்­ப­டி­யா­வது கண்டு பிடித்துக் கொடுங்கள்.. சேர்….” என பெற்றோர் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் கெஞ்­சிக்கொண்டு இருக்கிறார்கள். நிரஞ்சன் என்னும் 16 வயது மாணவனே இவ்வாறு காலையில் சென்று மாலை வீடு திரும்பவில்லை. அந்த கெஞ்சல் முறைப்பாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத , அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து அதிரடியாக விசேட தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்தார்கள். இரவு 12.00 மணி ஆகியும் , ஊர் மக்கள் தூங்கச் செல்லவில்லை. தொடர்ந்தும் தேடினார்கள். கடந்த 15ம் திகதி அதிகாலை சுமார் 3.50 மணிக்கு நிரஞ்சன் வீட்­டி­லி­ருந்து சுமார் ஒன்­றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு குறுக்குப் பாதையில் சந்­தே­கத்­துக்கு இட­மான இரத்தக் கறைகள் இருப்­பது ஊராரால் அவ­தா­னிக்­கப்­பட்­டது.
விடயம் உட­ன­டி­யாக உட­வ­லவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் டபிள்யூ.ஜி. பண்­டா­ர­விற்கு அறி­விக்­கப்­பட்­டது. ஸ்தலத்துக்கு விரைந்த போது குறித்த இரத்தக் கறை இருந்த இடத்­தி­லி­ருந்து சுமார் 30 மீற்றர் தூரத்­துக்கு தொடர்ச்­சி­யாக பாதையில் இரத்தம் வழிந்­தி­ருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டது. இரத்தக் கறை முடி­வ­டைந்த இடத்­தி­லி­ருந்து பாதையின் வலது பக்­க­மாக தேக்கு மரக் காட்­டி­னுள்ளே ,3 அடிக்கு மேல் அடர்ந்து வளர்ந்த பற்­றை­ பற்றைகளுக்குள் யாரும் எதிர்­பார்க்­காத அந்த விடயம் பொதிந்­தி­ருந்­தது. ஆம். நிரஞ்சன் இரத்த வெள்­ளத்தில் கிடந்தான். பெற்றோர் கத­றினர். மற்றோர் சோகத்தில் மயங்­கினர். பயன் என்ன ? அப்­போது நிரஞ்சன் இவ் உல­கிற்கு விடை கொடுத்­தி­ருந்தான்.

அணிந்­தி­ருந்த இளம் சாம்பல் நிற முக்கால் காற்­சட்­டையில் தொடைப் பகு­தியை ,ஊட­றுத்து ஒரு வெட்டுக் காயம். இரு கைகளும் கழுத்தை நோக்கி மடக்கி இருக்க கழுத்தும் அறுக்­கப்­பட்­டி­ருந்­தது. அணிந்­தி­ருந்த டீ சேட் நெஞ்சுப் பகு­தி­வரை மேல் உயர்ந்­தி­ருக்க முதுகுப் பகு­தி­யிலும் வயிற்றுப் பகு­தி­க­ளிலும் கீறல்கள், இரத்தக் கறைகள். அம்மா….. குற்­ற­வா­ளி­களை நாம் எப்­ப­டி­யேனும் பிடிப்போம்…. என்ன செய்­வது உங்­க­ளுக்கு ஆறுதல் கூற எனக்குத் தெரி­ய­வில்லை….. என கூறி­ய­வாறு சிறிது நேரம் அமைதி காத்த பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டார தனக்குத் தேவை­யான அந்தக் கேள்­வியைக் கேட்டார். அம்மா…. மக­னுக்கு யாரு­ட­னா­வது பிரச்­சி­னைகள் இருந்­ததா ? அந்தக் கேள்­விக்கு நிரஞ்சன் அம்மா தந்த பதில் நடந்­தது என்ன என்­பதை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது.
சேர்… எனக்கு தெரிந்த அளவில் பெரிய பிரச்­சி­னைகள் என்று எதுவும் இல்லை. அவன் ஷாமா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற பெண்ணை காத­லிக்­கிறான். அது தொடர்பில் ஒரு ஆட்­டோக்­கார பைய­னுடன் பிரச்­சி­னைப்­பட்டான். அவ்­வ­ள­வுதான் என நிரஞ்சனின் அம்மா பொலிஸ் நிலையம் போவ­தற்கு முன்­பா­கவே முக்­கி­ய­மான தக­வலை வழங்­கினார். பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டா­ரவின் மூளை உடன் இயங்­கி­யது. தனது தொலை­பே­சியை எடுத்தார். பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­சிறி பெரே­ராவை அழைத்தார். மூன்று குழுக்­களை அழைத்தார். அத­னு­டா­கவே முச்­சக்­க­ர­வண்டி சாரதி சுஜீ­வவை தேடினார். பெற்­றோரின் வாக்கு மூலம் எடுத்து முடி­வ­தற்குள் சுஜி­வவை பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தார். அன்று நடந்த பொலிசாரின் பூசையை அடுத்து , என்னை அடிக்காதிங்க சார் ... நான் முழுவதையும் சொல்கிறேன். அவளுக்காக தான் நான் நிரஞ்சனைக் கொன்றேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டான் ஆட்டோக்கார சுஜீவ.
சார் அவன் உயிரோடு இருக்கும்வரை , எனக்கு அவள் கிடைக்க மாட்டாள் ... அதனால் தான் கொலைசெய்தேன் என்றான். பொலிஸ் விசா­ர­ணை­களில் சந்­தேக நப­ரான சுஜீவ வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளின்­ படி நிரஞ்சன் மற்றும் ஷாமா ஆகியோர் ஒரே வகுப்பு மாண­வர்கள். நிரஞ்சன் ஷாமாவைக் காதலித்து வந்தான். ஆனால் இதுவரை தனது காதலை ஷமா சொல்லவே இல்லை. இருப்பினும் நெருங்கிய நண்பியாக பழகி வந்துள்ளார். இருப்பினும் நிரஞ்சன் பற்றி யாராவது குறைசொன்னால் கூட ஷமா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குச் செல்லும் அளவு , அவர்கள் நட்பு இருந்தது. அப்­ப­டி­யான பின்­ன­ணியில் ஒருநாள் சுஜீவ தனது முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த ஷாமாவுக்கு தனது தொலை­பேசி இலக்­கத்தை கொடுத்து காதல் விண்­ணப்பம் செய்­துள்ளான். இந்த விடையத்தை ஷமா நிரஞ்சனிடம் கூறவே, நிரஞ்சன் சுஜீவவோடு தகறாறில் ஈடுபட்டுள்ளார். அது என் காதலி என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 14 ஆம் திகதி மேல­திக வகுப்­புக்கு செல்லும் போது நிரஞ்சனை ,கடத்தும் நாடகம் அரங்­கே­றி­யுள்­ளது. இந்த கடத்­த­லுக்கு இந்­தி­கவும் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) சம்­பந்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். என பொலிஸார் சந்­தே­கிக்கும் நிலை அங்­குதான் உரு­வா­னது. 18 வய­தான இந்­தி­க­வுடன் நிரஞ்சன் கதைத்­துக்­கொண்­டி­ருந்­ததை பலர் அவ­தா­னித்­துள்ள நிலையில் ,அதன் பின்­னரே அவன் மாய­மா­கி­யுள்ளான். இந்­நி­லையில் இந்­தி­க­வையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்­தனர். இந்­திக தன் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை மறுக்க சுஜீ­வவோ தான் ,மட்­டுமே தனது முச்­சக்­க­ர­வண்­டியில் சென்று இந்த கொடூ­ரக்­கொ­லையை செய்­த­தாக ஒப்­புதல் வாக்கு மூலம் அளித்­துள்ளான். நிரஞ்சன் வீட்டின் முன்னால் அவனை அழைத்­துச்­சென்றேன். சிறிது தூரம் சென்று அவனை கத்­தியால் வெட்டிக் கொன்றேன். சட­லத்தை காட்­டுக்குள் இழுத்து சென்று வீசினேன் ,என சுஜீவ பொலி­ஸா­ரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலையுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கருதும் பொலிஸார் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக அறிவியல் தடயங்களை வைத்து விசாரித்து வருகின்றனர். இந்திக இல்லாது இக்கொலை நடைபெற்றிருக்க சாத்தியம் இல்லை என்று பொலிசார் நம்புகிறார்கள். எது எப்படியோ காதலால் உயிர் பறிக்கப்பட்டோர் பட்டியலில் நிரஞ்சனின் பெயரும் பதிவாகி விட்டது போங்கள்.

Geen opmerkingen:

Een reactie posten