தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juni 2015

பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையாயின் பார்த்துக்கொள்கிறேன்: மஹிந்த

ஐ.நா அறிக்கை மைத்திரியின் கையில் கிடைக்கும் வரை உள்நாட்டு விசாரணை இல்லை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 12:54.12 PM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் 14ம் திகதி தொடக்கம், ஒக்ரோபர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக, ஜனாதிபதியின் கையில், ஓகஸ்ட் 21ஆம் நாள் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று கிடைக்கும்.
அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அறிக்கையின் பிரதி கையில் கிடைக்கும் வரையில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை - திருகோணமலையில் நாளையும் தொடரும்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 01:02.04 PM GMT ]
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு திருகோணமலையில் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் தனது முறைப்பாடுகளை பதிவு செய்து கொண்டது.
இதன் முதற்கட்டமாக மூதூர் பகுதியில் நேற்றும் இன்றும் இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மூதூர் பகுதியில் இருந்து முன்னதாக ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தோர் வாய்மொழி மூலமான வாக்குமூலத்தை அளிக்க அழைக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய முறைப்பாடுகளை முன்வைக்க விரும்புபவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் மூதூர் பிரதேச செயலகத்தில் விசாரணை நடைபெற்ற போது, செயலகத்திற்கு வெளியில் ஒன்றுதிரண்ட மக்கள் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மற்றும் நாளை முறுதினம் (29,30ம் திகதிகளில்) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான ஆணைக்குழுவினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம தலைமையில் நியமித்திருந்தார். இவ் ஆணைக்குழு கடந்த ஆண்டில் வடக்கின் பல பகுதிகளிலும் பதிவுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையாயின் பார்த்துக்கொள்கிறேன்: மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 01:32.33 PM GMT ]
என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அதற்கு பின்னர் நான் பார்த்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான முறையில் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு இன்று மதவழிபாடுகளை மேற்கொள்ள சென்ற வேளை அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து நான் அன்றைய தினம் பார்த்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் வேட்பாளர் அனுமதி வழங்கப்படாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிரடியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டியிலுள்ள புனித தலதா மாளிகைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில்.

Geen opmerkingen:

Een reactie posten