தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juni 2015

வெளிநாட்டு தமிழர் கட்டமைப்பை சிதைப்பதில் முக்கிய அரச புலனாய்வாளர்



மைத்திரி- ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து நடாத்தும் காய் நகர்த்தலில் விழிப்படையாவிட்டால், இலங்கை அரசின் வெற்றி நிச்சயம் என அரசியல் ஆய்வாளர் ச.பா.நிர்மானுசன் குறிப்பிட்டார்.
மைத்திரி- ரணில் அரசாங்கம் தமிழ் மக்களை அரவணைப்பது போன்று நடித்து அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பரில் வெளிவர இருக்கும் ஐ.நா விசாரணை அறிக்கை இலங்கை அரசிற்கு தர்மசங்கடமான நிலையை தோற்று விக்கக் கூடாது என்பதற்காக தங்களின் வலைக்குள் புலம்பெயர் அமைப்புக்களை சிக்க வைத்துள்ளனர்.
இதனால் இலங்கை அரசின் பொறிக்குள் சிலர் சிக்குண்டுள்ளார்கள். போன்ற பல தகவல்களை லங்காசிறி 24 செய்தி சேவையின் செவ்வியில் நிர்மானுசன் பகிர்ந்து கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten