தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juni 2015

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க கூடாது! கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 08:03.07 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெகு விரைவில் ஜனாதிபதி, கட்சித் தலைவர் பதவியை கைவிட்டு கட்சி சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்திரிக்கா குமாரதுங்கவுக்கே அப்பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் ஜனாதிபதி இப்பதவியை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க ஜனாதிபதி இணக்கம்: டீ.பீ.ஏக்கநாயக்க
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 08:32.46 AM GMT ]
ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியை இணைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட 06 பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டப்ல்யூ.டீ.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என குறித்த குழுவின் உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பீ.ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தனிப்பட்ட வேலைக்காக வெளிநாடு சென்றுள்ள சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சயில் வேட்புரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கும் போது பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பீ.ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் தனியாக தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRdSUepzI.html


மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க கூடாது! கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 09:19.09 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் வேட்புரிமை வழங்க வேண்டாம் என தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு பல்வேறு வகையில் ஆதரவு வழங்கிய பலர் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்னளர். இதன்போது மஹிந்தவுக்கு பிரதமர் வேட்புரிமை வழங்கக்கூடாதென வலியுறுத்தியுள்ளதாக சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடையாத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று மாலை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு ஆதரவு வழங்கிய முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைக்கு இன்று மாலைக்குள் முடிவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRdSUep0A.html

தனியாக போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 04:01.25 AM GMT ]
இம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இக்கூட்டமைப்பில் 4 கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten