தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 juni 2015

பேசுவதன் மூலமே தெளிவுபட முடியும்!

முன்னாள் ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றி அளித்துள்ளது: டிலான் பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 06:28.09 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.இச்சந்திப்பு வெற்றியுடன் நிறைவடைந்ததாக ஆறு பேர் கொண்ட குழுவின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி இக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இதன் போது முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த சந்திப்பின் பின்னர் ஆறு பேர் கொண்ட உறுப்பினர்கள் ஊடகத்திடம் குறிப்பிட்டிருந்தார்கள்.
சமீபத்தில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதையை ஜனாதிபதியை இணைக்கும் முயற்சியில் 06 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
W.J.ஜே.செனவிரத்ன தலைமை தாங்கும் இக்குழுவில் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, குமார் வெல்கம, டிலான் பெரேரா மற்றும் டீ.பீஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்குவார்கள்.

பேசுவதன் மூலமே தெளிவுபட முடியும்!
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 07:06.43 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை மன ஆறுதலைத் தருகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது பேச்சுவார்த்தை மூலமே சாத்தியமாகும் என்பதால் தொடர்ந்து பேசுவது அவசியம்.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்தித்து தொடர்ந்தும் பேசுவதெனத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த இலக்கை அடைவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் பேசியாக வேண்டும்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இனப்பிரச்சினை குறித்துப் பேசுவது ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு உதவும் என நம்பலாம்.இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது தொடர்பில் ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
அதில் இரு தரப்பும் ஆயுத பலத்துடன் பேசிய சந்தர்ப்பங்களும் உண்டு.எனினும் நடந்த பேச்சுவார்த்தைகளில், உண்மைத் தன்மை இல்லாமல் போனதன் காரணமாக பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இது தவிர, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பேச்சுவார்த்தைகளில் உச்ச அதிகாரம் உள்ள தலைவர்கள் கலந்து கொள்ளாமல் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமையும் பேச்சுகள் இடையில் முறிந்து போவதற்கு வாய்ப்பாகியது.
இதற்கு மேலாக, பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போது இரு தரப்பைச் சார்ந்தவர்கள் தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டதும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுறக் காரணமாயிற்று.
இவை காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பேசுதல் என்ற விடயம் அப்படியே அமிழ்ந்து போயிற்று.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் ஆட்சியில் தெரிவுக்குழு என்ற காட்டாப்பை முன்வைத்த போது, தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுத்துவிட, பேச்சுவார்த்தை என்ற விடயம் பேசாப் பொருளாகியது.
இந்தநிலையில் 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குப் பலமும் சேர்ந்து மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் ஜனாதிபதியானார்.
ஜனாதிபதி மைத்திரி இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறார். இதற்காக அவர் நல்ல சமிக்ஞைகளை விடுத்துள்ளார்.
எனினும் அவரின் நன்முயற்சிகளுக்கு தென்பகுதி அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்பது தெரிந்த விடயமாகினும் ஜனாதிபதி மைத்திரியின் கரத்தைப் பலப்படுத்தி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வியூகம் அமைக்க வேண்டும்.
அரசும், தமிழ்த் தரப்பும் மாறிமாறி குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து இருதரப்பும் பேசி அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது; தொடர்ந்து தமிழர் உரிமை விடயத்தில் தீர்வு காண்பது என்ற வாறாகப் பேச்சுவார்த்தைகள் நகர்த்தப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை இடம்பெற்றால் மட்டுமே எங்கெங்கு தீர்வுக்குத் தடைகள் இருப்பதென்பது தெரியவரும் என்பதுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் என்ற விடயம் நினைவுக்குரியதாக இருக்கும்.
ஆகையால் ஜனாதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அடிக்கடி சந்தித்து பேசுவது நல்லதொரு சூழலைத் தோற்றுவிக்க உதவும் எனலாம்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfx0H.html#sthash.Ow7NrzrG.dpuf

Geen opmerkingen:

Een reactie posten