இலங்கை மக்கள் சட்டத்தை சரியாக அறியாததாலும் பயிற்சிகளை பெறாதவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்வதாலும் சமூகத்திற்கு பாரிய சேதம் ஏற்படுவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளரான சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால், நாட்டிற்குள் அறிவுபூர்வமாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய நூலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயதுன்னே, 19வது திருத்தச் சட்டத்திலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என்றார்.
அடுத்த காவற்துறை மா அதிபர் பதவிக்கு தகுதியானவர்கள் 10 பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை நியமிக்க ஜனாதிபதியின் பரிந்துரை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten