தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு 9ம் இலக்க மண்டபத்தில் மதியம் 15.30மணிக்கு இடம்பெறுகின்றது.
Hybrid பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு பல்வேறு உலகத் தரப்புக்களும் எத்தனித்து வருகின்றன.
இந்நிலையில் அனைத்துலக விசாரணையே சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு தகுந்த பொறிமுறை என்பதனை வலியுறுத்தும் வகையில் Accountability for Sri Lanka: Will Hybrid Mechanism Work? எனும் தலைப்பில் இந்த உப மாநாடு இடம்பெறுகின்றது.
கம்போடியாவினை மையப்படுத்தி ஐ.நா விசாரணை விவகாரத்தில் முக்கிய நபராக பங்காற்றியிருந்த பிரபல சட்டவாளர் Hon. Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence) அவர்கள் இந்த உப மாநாட்டில் பங்கெடுக்க இருப்பதோடு ICPPG மையத்தின் தலைவர் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களும் இந்த உப மாநாட்டில் பங்கெடுத்துக் கொள்கின்றார்.
ஐ.நாவுக்கான மொரிசியஸ் தூதரகத்தின் வர்தக விவகாரங்களுக்கான முன்னாள் பிரதிநிதியாக இருந்த Dr. Narsinghen Hambyrajen (Professor of Law, Former Minister Counselor Trade Division, Permanent mission of Mauritius in Geneva) அவர்கள் இந்த உப மாநாட்டினை தலைமை தாங்கிவிருக்கின்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் இக்கூட்டத் தொடரில் இடம்பெறுகின்ற இரண்டாவது உப மாநாடு இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐ.நா விசாரணைக்கு போலிச் சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !
இலங்கை தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச் சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், தமிழினப் படுகொலையினைப் புரிந்த இலங்கை அரசுக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுகள் மீதான சிங்கள தேசத்தின் கோபத்தையே இச் செய்தி வெளிக்காட்டுகின்றது.
இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கையை மையப்படுத்திய தொடர் உப மாநாடுகள், இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு பொறிமுறை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பன்முகச் செயற்பாடுகள், சிறிலங்கா அரசுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது எனவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீதான சாட்சியமற்ற போரின் சான்றுகள் தொடர்சியாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில், அதற்கான பொறுப்புக்கூறலை நிராகரித்து வருகின்ற இலங்கை அரசாங்கம், இவ்வாறான சான்றுகள் போலியானவை என கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

Geen opmerkingen:
Een reactie posten