தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juni 2015

பிரதமர் வேட்புரிமை கட்டாயம் – மஹிந்த தரப்பினர் தீர்மானம்

மகிந்த தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 08:52.22 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி உட்பட பல கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணியில் போட்டியிட தயாராக இருப்பதாக அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் வரையே நாங்கள் காத்திருந்தோம்.
100 நாட்களில் நாட்டின் பயணத்தை பின்நோக்கி திருப்பி,ஈழ தேசிய வாதத்தை போஷித்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, நல்லாட்சியை முற்றாக இல்லாமல் செய்து, நாட்டை சீரழிக்கும் இந்த பயணத்தை மாற்றியமைப்பதற்காக அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்.
அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கி, ஆகஸ்ட் 18 ஆம் திகதி நாட்டில் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் எதிர்ப்பார்ப்பில் தேசிய சுதந்திர முன்னணி இந்த தேர்தலில் போட்டியிடும் எனவும் மொஹமட் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.

பிரதமர் வேட்புரிமை கட்டாயம் – மஹிந்த தரப்பினர் தீர்மானம்
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 10:07.15 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெயரிடப்படுவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கூடிய கூட்டணியின் தரப்பினர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, டீ.பீ.ஏக்கநாயக்க ஆகிய பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டணியின் கீழ் தேர்தலில் களமிறங்குவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கமைய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் நெறிமுறைகளை முன்வைத்துள்ளனர்.
அதற்கமைய கூட்டணியின் கீழ் போட்டியிடுவது என்றால் பிரதமர் வேட்புரிமை அவசியம் என்பதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் அறிவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மஹிந்தவுடன் நாட்டை வெற்றி பெற செய்வோம் என்ற பேரணியில் நிச்சயமாக முன்னாள் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளமையும் இங்கு உறுதியாகியுள்ளது.
மகிந்த அணியினரின் பிரதமர் வேட்பாளர் முதலாம் திகதி அறிவிக்கப்படுகிறார்?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் முதலாம் திகதி அறிவிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவர்து தமர் முதலாவது கூட்டத்தை ஜூலை 6 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மிரிஹானவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyGRbSUeoyD.html

Geen opmerkingen:

Een reactie posten