முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபசக்வை கடந்த தேர்தலில் நிராகரித்து தோற்கடித்தமையால் சிக்கலில் வீழ்துள்ளதாக தெரிவித்துள்ள சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறுகிறார்.
அமைச்சரவையில் சிலர் சர்வாதிகாரமாக செயற்படும் சிலர் ஜனாதிபதியின் ஆசனத்தை ஆக்கிரமிக்க முயல்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் அவருடன் முரண்பாடுகள் காணப்பட்டபோதும் தனக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் தற்போதைய அமைச்சரவையில் அது மறுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய தேர்தல் மறையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைச்சரவையில் சர்வாதிகாரப் போக்கு நிலவுவதாகவும் தமது குரல்கள் நசிக்கப்படுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தபோதும் தமது அபிலாசைகளுக்கு மாறாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருப்பது ஜனாதிபதி இழைத்த துரோகம் என்றும் ஹக்கீம் கூறுகிறார்.
நாட்டின் ஏழு மாகாணங்களிலிருந்தும் ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நோக்கிலேயே தேர்தல் முறை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் சிறிய கட்சிகள் மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் குறித்தோ சிந்திக்கப்படவி்ல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர், சட்ட வல்லுனர் என்று எவருக்கும் விளக்கமில்லாத வகையில் கொண்டுவரப்படும் இந்த தேர்தல் முறையை ஏன் அவசர அவசரமாக அரசாங்கம் கொண்டுவர நினைக்கிறது என்றும் அதற்கான தேவை என்ன என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121284/language/ta-IN/article.aspx
Geen opmerkingen:
Een reactie posten