தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juni 2015

இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து: அதிர்ச்சியில் சிறிலங்கா !!



சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துக்கள் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசமெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரையில் காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரி இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.
www.tgte-icc.org எனும் இணையத்மூலமும் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இக் கையெழுத்து இயக்கத்துக்கான தொடர்பான படிவங்களை ஒப்பங்களுடன், ஜுலை 10 ம் திகதிக்கு முன்னராக குறித்த TGTE 875 Avenue of the Americas, Suite 906,New York, NY 10001, USA இந்த முகவரிக்கு கிடைக்குமாறு ஆவன செய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten