தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juni 2015

குற்றவாளிகளுடன் இணைய மைத்திரிக்கு வெட்கமில்லையா: ஹரின் பெர்னாண்டோ கேள்வி

குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் வெட்கம் ஏற்படுத்தும் நரம்பு சிதைந்து விட்டதா என்பதே எமக்குள்ள கேள்வியாகும்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதி அல்லவா?
அதுமட்டுமின்றி, மகிந்த ராஜபக்சவின் தவறான முடிவுகள் குறித்து ஜனாதிபதி தானே நாட்டில் மேடைகளில் பேசினார்.
தான் ஜனாதிபதியாக தெரிவாகாவிட்டால், மகிந்த ராஜபக்சவை தன்னை 6 அடி நிலத்திற்குள் கொண்டு சென்று விடுவார் என கூறியது மைத்திரிபால சிறிசேன இல்லையா?
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு ஏன் சரியான பதிலை வழங்க முடியாதுள்ளது எனவும் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடன் மைத்திரிபால சிறிசேன இணைவது என்பது குற்றவாளிகள் எனக் கூறியவர்களை ஜனாதிபதியே பாதுகாப்பதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten