தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juni 2015

போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: ஏஎவ்பி!

அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும்: முரளிதரன்
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 12:58.06 AM GMT ]
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், உலக வங்கி, தேசிய சைக்கிளோட்ட சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புக்களினால் விஹார மஹாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, சுகாதாரமான உணவு விழாவில் அதிதிகளில் ஒருவராக பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நான் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியலில் ஈடுபடுவதனால் விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பு பாதிக்கப்படும். இதனால் நான் எந்தவொரு கட்சியிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன்.
நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
வெளிநாட்டு பிராந்திய அணியொன்றுடன் இரண்டாண்டு கால ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் கதையே தவிர உண்மையில்லை என முரளிதரன் கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோற்றாலும் ரணிலே அடுத்த பிரதமர்: அகில விராஜ்
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 02:11.07 AM GMT ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவினாலும் அடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவேயாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றியீட்டுவோம்.  நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றாலும் நாம் வெற்றி, வென்றாலும் நாம் வெற்றி.
ஏனெனில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு நாம் வெற்றியீட்டுவோம்.
அவ்வாறு ஆசனங்களை வெல்ல முடியாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்போம்.
அந்த தேசிய அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.
19ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களுடன் கூடிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடமையாற்றவார் என அகில விராஜ் காரியவசம் தம்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அதிகம் ஆடக் கூடாது: கீதா குமாரசிங்க
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 02:38.13 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி அதிகம் ஆடக் கூடாது என தென் மாகாணசபை உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று பெரிய சத்தம் போடுகின்றது. அவ்வளவு எடுத்தோம் இவ்வளவு எடுத்தோம் என மார் தட்டிக்கொள்கின்றது.
எனினும் அவர்களுக்கு நாற்பது லட்சம் வாக்குகளே உண்டு.
நாம் சொல்கின்றோம் 40 லட்ச வாக்குகளை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அமைதியாக இருக்க வேண்டும். அதிகம் ஆடக்கூடாது.
இந்த அரசாங்கம் கூட அவர்களுக்கு பாவத்திற்கே கிடைத்தது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த அரசாங்கம் முடிவடையும்.
19ம் திருத்தச் சட்டம் குறித்து ஆடிய ஐக்கிய தேசியக் கட்சி, 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆட்டமில்லை.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது நழுவிச் செல்லவே முயற்சித்தது. ஐக்கிய தேசியக் கட்சியினர், ஜனாதிபதி தேர்தலின் போது ஆயிரம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.
இந்த பொய்காரர்கள் மீண்டும் வாக்கு கேட்டு வரட்டும் என்றே மக்கள் காத்திருக்கின்றார்கள் என கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: ஏஎவ்பி
[ திங்கட்கிழமை, 29 யூன் 2015, 03:13.53 AM GMT ]
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 
இதன்போது தாம் தமது சமூகத்தினரின் உடல்ரீதியான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாவதாக பாதிக்கப்பட்ட பெண்களை கோடிட்டு செய்திசேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கணவன்மாரை இழந்த பெண்களுக்கு தமது சமூகத்திலேயே உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்று சமூக சேவையில் ஈடுபட்டுள்ள கிறிஸ்டின் மனோகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
தமது நிலையை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கணவன்மாரை இழந்த பலர் வெளிநாட்டு செய்திசேவையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சிலர் குற்றவாளிகளால் பாலியல் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண மனிதரைப்போன்று நடந்து கொள்வதனால் அவரிடம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியும் என்று நம்புவதாக வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRdSUeo7I.html

Geen opmerkingen:

Een reactie posten