[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:14.44 AM GMT ]
இந்த மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே அரசாங்கத்தினால் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழு மோசடிகளில் அர்ஜூன மஹேந்திரனுக்கு தொடர்பில்லை என்று அறிவித்திருந்தது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர தலைமையிலான பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான “கோப்” இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு மஹேந்திரனுக்கு மோசடிகளில் தொடர்பிருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நேற்று மாலை நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, அரச கணக்காய்வாளர் திணைக்களம் இந்த விடயத்தை கண்டுபிடிக்கவில்லை.
அரசாங்கமே இந்த முறி கொள்வனவில் மோசடி இருப்பதை கண்டுபிடித்து விசாரணையை நடத்தியது. இந்தநிலையில் “காவல் நாய் இருந்தும் அது குரைக்காதுபோனால் அதனால் என்ன பயன்” என்று ரணில் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை குறித்த பிரச்சினை தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் கோப் குழுவிடம் தாம் சாட்சியமளிக்க கோரியபோதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே இந்தக்குழுவின் மீதான நம்பிக்கை தொடர்பில் கேள்வி எழுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxyI.html#sthash.Yo5N5z4M.dpufஇதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர தலைமையிலான பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான “கோப்” இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு மஹேந்திரனுக்கு மோசடிகளில் தொடர்பிருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நேற்று மாலை நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த ரணில் விக்கிரமசிங்க, அரச கணக்காய்வாளர் திணைக்களம் இந்த விடயத்தை கண்டுபிடிக்கவில்லை.
அரசாங்கமே இந்த முறி கொள்வனவில் மோசடி இருப்பதை கண்டுபிடித்து விசாரணையை நடத்தியது. இந்தநிலையில் “காவல் நாய் இருந்தும் அது குரைக்காதுபோனால் அதனால் என்ன பயன்” என்று ரணில் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை குறித்த பிரச்சினை தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் கோப் குழுவிடம் தாம் சாட்சியமளிக்க கோரியபோதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே இந்தக்குழுவின் மீதான நம்பிக்கை தொடர்பில் கேள்வி எழுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தெஹிவளையில் மாணவர்கள் கடத்தப்பட்டதற்கும் எனக்கு தொடர்பில்லை: கடற்படை தளபதி
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:18.48 AM GMT ]
2009ஆம் ஆண்டு கடற்படையினர் சிலரால் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடத்தல் விடயம் அப்போது கடற்படை தளபதியாகவிருந்த வசந்த கரன்னாகொடவுக்கு தெரிந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவர் நினைத்திருந்தால் மாணவர்களை விடுவித்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த கருத்தை மறுத்து கரன்னாகொட ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxyJ.html#sthash.jAMxshBc.dpufஇந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடத்தல் விடயம் அப்போது கடற்படை தளபதியாகவிருந்த வசந்த கரன்னாகொடவுக்கு தெரிந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவர் நினைத்திருந்தால் மாணவர்களை விடுவித்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த கருத்தை மறுத்து கரன்னாகொட ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
- தொடர்புடைய செய்தி: திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!
நாட்டில் 24 மணி நேரமும் புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன: பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:32.10 AM GMT ]
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள், விரிவாக ஆராயப்பட்டு பகுப்பாய் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடாத்தப்படுகிறது.
இக் கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டில் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளும்படியான எந்த உத்தரவையும் நாம் பெறவில்லை.
மேலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பாக இராணுவம் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten