தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 juni 2015

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி அல்ல, தலைவர் பதவியே அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்

ஐந்து மாகாணங்களின் ஆளுநர்கள் நீக்கப்பட உள்ளனர்?
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 07:41.05 AM GMT ]
ஐந்து மாகாணங்களின் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானம் தொடர்பான ஆவணங்களில் ஜனாதிபதி கடந்த 24 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.
இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் இந்த ஆளுநர்கள் நீக்கப்பட உள்ளனர்.
சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களின் ஆளுநர்களும் அதில் அடங்குவதாக கூறப்படுகிறது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfx1C.html#sthash.66HY5exp.dpuf

மகிந்த ராஜபக்ச அரசியல் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார் – சுனில் ஹந்துன்நெத்தி
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 08:04.42 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், பிரதமர் பதவியை வழங்க மறுத்த நபரிடமே பிரதமர் பதவியை கோரும் அரசியல் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனை அரசியல் அனர்த்தமாகவே நான் கருதுகிறேன். மகிந்த ஜனாதிபதியாக இருக்கும் போது, பிரதமர் பதவிக்கு சந்தர்ப்பம் வழங்காத நபரிடமே தற்போது பிரதமர் பதவியை கோருகிறார்.
பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தகுதியை தருமாறு கேட்கும் அளவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அரசியலில் சரிவு ஏற்பட்டது.
அதிகாரமே இதற்கு காரணம், அதிகாரம் இன்றி இருப்பில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் சுனில் அந்துன்நெத்தி கூறியுள்ளார்.


மஹிந்தவுக்கு பிரதமர் பதவி அல்ல, தலைவர் பதவியே அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 08:24.48 AM GMT ]
அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைய முயற்சிப்பதாகவும், மஹிந்த ராஜபக்ச அதற்கு வாய்ப்பு வழக்க கூடதாதெனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவி பேராசையில் ரத்ன தேரர்கள் உட்பட குழுவினர் இம்முயற்சியை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு செயற்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு அவசியம் பிரதமர் பதவி அல்ல, நாட்டின் தலைவர் பதவியே என பெங்கமுவே நாலக தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten