முன்னாள் போராளியான ரூபன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை வந்து சந்தித்துக் கலந்துரையாடினார் என்றும், எனினும் அப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தன்னிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
முன்னாள் போராளியான ரூபனுக்கு தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்படி ஒரு முடிவு ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ரூபன் தேர்தலில் போட்டி?
விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக செயற்பட்ட ரூபன் என்ற ஆத்மலிங்கம் ரவிந்திரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் ரூபனுக்கு தேர்தலில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி வேட்புரிமை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
ரூபன் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானால், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய விடுதலைப் புலிகளின் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த முதல் முன்னணி தலைவர் அல்லது உறுப்பினராக அவர் இருப்பார்.
விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவராக இருந்து, பின்னர் அதில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தேசிய பட்டியல் மூலமே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
நான்காவது ஈழப் போருக்கு பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சி விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை தம்மோடு இணைத்து கொள்வதில்லை என தீர்மானித்திருந்தது.
இந்த நிலையிலேயே ரூபனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten