[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 07:55.55 AM GMT ]
கோத்தபாய ராஜபக்ச தனது முகநூல் கணக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிக்கை ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அவர் தனது முகநூல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது,
சமீபத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் நான் அவதானம் செலுத்த விரும்புகின்றேன்.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அறிக்கை குறித்து காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் இன்னமும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எனினும், இவ்வாறான ஓர் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாதுகாப்பு கருதி எவ்வித இராணுவ முகாம்களையும் அகற்றவில்லை.
எனினும் தற்போதைய அரசாங்கம் வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்ற ஆரம்பித்துவிட்டது.
தேசிய பாதுகாப்பு காரணமாக மிக முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த முகாம்களும் அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தந்திரோபாய ரீதியாக வழியமைக்கவுள்ளமை குறித்த புலனாய்வு அறிக்கை ஊடாக நிரூபமாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்கு வந்த தலையிடி! ரணிலுக்கு வரவிருக்கும் ஆப்பு?
[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 01:30.58 PM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்தரின் வீழ்ச்சியும், மைத்திரியின் எழுச்சியும் யாரும் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்தது. அதன் ஒரு முடிவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை மைத்திரி ஏற்றுக்கொண்டமையாகும்.
ஆனால் இப்பொழுது அப்பதவியே மைத்திரிபால சிறிசேனவிற்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக நம்பகமான தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.
இன்னும் ஒரு சில வாரத்தில் இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிட வேண்டிய சூழ்நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்.
இந்நிலையில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுவேட்பாளராக யாரை நியமிக்கலாம்? சந்திரிக்காவா? மகிந்தவா? அல்லது வேறு சிலரா என்பது தொடர்பாக குழம்பிப்போயுள்ள மைத்திரி சரியான முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் குறித்த தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.
இதுவொருபுறமிருக்க, மகிந்த ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மைத்திரியின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நெருக்குதல்கள் கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் இன்னொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் மாற்றுக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் சந்திரிக்காவும் தேர்தலில் களமிறங்க கூடும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் சந்திரிக்காவா? மகிந்தவா என்று ஒரு முடிவு எடுக்க முடியாத நிலையில் இருக்கும் அவர் புதிய அரசில் பிரதமராக இருக்கும் ரணிலை பற்றியும் கவலை கொண்டுள்ளதாகவும், ரணிலின் அடுத்த பிரதமர் கனவு சிதையப்போவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஐக்கிய தேசியக் கட்சியினை வளர்த்தெடுக்க வேண்டும் என்று துடியாய்த்துடிக்கின்றார். நடக்கவிருக்கும் தேர்தலில் ரணில் பிரதமர் பதவியை பிடிக்கவில்லையாயின் அவரின் கட்சித் தலைமைப் பதவியும் கையை விட்டுப்போகும் நிலை உருவாகும் நிலையும் தோன்றியுள்ளது.
இந்நிலையில் தனது கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினையும் பாதுகாக்க வேண்டிய நிலையிலும் இப்பொழுது மைத்திரிபால பொறுப்பானவராக இருக்கின்றார்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக மகிந்தரை வீழ்த்த பொறிமுறைகளை வகுத்த மேற்குலகு அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானித்து மைத்திரியிடம் தெரிவிக்கலாம் என்றும் சில தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
எதுவாயினும், மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை பாதுகாத்து ஆட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார். அதே நேரம் மேற்குலகின் இசைக்கு ஏற்ப ஆடவேண்டியவராகவும் இருக்கின்றார்.
இவற்றிற்கு எல்லாம் முடிவை எடுப்பதில் அவருக்கு தற்பொழுது இருக்கும் சவால்கள் மிகப்பெரியது தான். ஆனால் இவற்றை மேற்குலகம் சரியாக கையாளும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால் இப்பொழுது மைத்திரியின் தலையிடியை விட ரணில் தனது கனவிற்கு ஆப்பு வந்துவிடுமோ என்று கலங்கிப்போயிருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவின் தகவல்களும் கசிந்துள்ளன.
பார்க்கலாம் இனி என்ன நடக்கும் என்று. நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்கின்ற செய்திகள் வேறு இப்பொழுது அடிபடுகின்றன. மேற்குலகின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் செல்லுமா இலங்கை என்பதை.
http://www.tamilwin.com/show-RUmtyGRXSUfv1J.html
Geen opmerkingen:
Een reactie posten