தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juni 2015

2009 க்கு பின்னர் நடந்த முக்கிய கைது: மறைந்திருந்த புலிகளின் முக்கியஸ்தரை பிடிக்க விரைந்த !


மன்னார் பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த விடுதலைப் புலிகளின் , ஒரு முக்கிய பிரமுகரைப் பிடிக்க யாழில் இருந்து புலனாய்வுப் பிரிவினர் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்தவேளை குறித்த நபர் , இலங்கை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மன்னாரில் உள்ள சில முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், இவரை இதுவரை காலமும் பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. இன் நிலையில் யாழில் உள்ள ஒரு முன் நாள் போராளி கொடுத்த தகவலுக்கு அமைவாகவே புலனாய்வுப் பிரிவினர் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் தற்போது "மணி மாஸ்டர்" என்று அழைக்கப்படும் , குக்கியஸ்தரைக் கைதுசெய்து விட்டார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. மணி மாஸ்டர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் மற்றும் நிதிப் பிரிவில் இருந்து இயங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதுவரை காலமும் , இலங்கை ராணுவத்தின் கைகளில் அகப்படாமல் , அவர் தலைமறைவாக இருந்துள்ளார் என்பது ராணுவம் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தமிழ் பகுதிகளையும் முன்னர் சல்லடை போட்டு தேடி , வடிகட்டி வைத்திருந்தார்கள் சிங்கள ராணுவத்தினர். ஆனால் இன்றுவரை பலர் தலைமறைவாக உள்ளார்கள் என்பது சிங்கள ராணுவத்திற்கு பெரும் சவலாக உள்ளது.
மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும் வரை சிங்கள ராணுவத்தால் என்ன தான் செய்ய முடியும். ஒரு இனத்தை அடக்கலாம். ஆனால் உணர்வுகளை அடக்க முடியுமா ?

Geen opmerkingen:

Een reactie posten