தேர்தல் நடத்தாலும், நடக்காவிட்டாலும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளிவரும் என்பது உறுதி என தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
குறிப்பாக யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச விசாணையின் அறிக்கையினை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட்டே தீரும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும், நடைபெறா விட்டாலும் வெளிவரும் அறிக்கை தடைப்படாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஜ.நாவின் அறிக்வை வெளிவரவிருந்தது. இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் போது மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு முறைதான் இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten