தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 juni 2015

மைத்திரியை ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசினார் மகிந்த - மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி

கல்வி அமைச்சருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடு
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:37.03 AM GMT ]
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கும், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனுக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளில் நிலவி வரும் காவல்காரர்கள் மற்றும் சமையல்காரர்களுக்கான பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளன. முன்னதாக சுத்தப்படுத்தல் தொழிலாளர்கள் 300 பேரை இணைத்துக் கொள்ள கல்வி இராஜாங்க அமைச்சருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் திடீரென அந்த எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்வி அமைச்சருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ்மொழி மூல பாடசாலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பொறுப்பினை தமக்கு வழங்குவதாக முன்னதாக கல்வி அமைச்சர் இணங்கியதற்கு அமைய நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும் தற்போது இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் இராதாகிருஸ்ணன் பிரதமரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxzC.html#sthash.PdSzpeRx.dpuf

மைத்திரியை ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசினார் மகிந்த - மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:55.55 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு பொதுவான ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டணி கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்வரும் பொது தேர்தலை வெற்றி பெறச் செய்வதற்காகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இணைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முடிவாக இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
20ஆம் திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதா அல்லது அதற்கு முன்னர் கலைப்பதா என்பது தொடர்பில் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சரவை உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று இரவு சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்று இன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்நாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் நேற்று மஹிந்தவுக்கு ஆதரவு வெளியிடும் 87 ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர் அவர்களுடன் பேச்சு நடத்திய மஹிந்த ராஜபக்ச தாம் ஒரு முக்கியமானவரை சந்தித்து விட்டு வருவதாக கூறி சென்று சுமார் 45 நிமிடங்களில் அங்கு திரும்பி வந்துள்ளார்.
இதன்பின்னர் ஆதரவாளர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு 87 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்து மஹிந்த கலந்துரையாடியுள்ளார்.
எனினும் இதன்போது பேசப்பட்ட விடயம் குறித்த தகவல் எவையும் வெளியாகவில்லை. இதற்கிடையிலேயே குறித்த 45 நிமிட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன இருப்பினும் இந்த செய்தியை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfxzD.html#sthash.PL48VgSX.dpuf

Geen opmerkingen:

Een reactie posten