திருகோணமலை பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு தனது கடமை முடித்து 10.30 மணியளவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது திருகோணமலை மட்டிக்களி சந்திக்கு அருகாமையில் துவிச்சக்கரவண்டியில் அப்பகுதியிலிருந்து வந்த நபர் ஒருவரும், வைத்தியரும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் காயமடைந்து கிடந்த நிலையில் அவ் வீதியால் வந்த இரண்டு இளைஞர்கள் வைத்தியரை அனுகி விசாரித்து மோட்;டார் சைக்கிளின் திறப்பை (சாவியை) வைத்தியரிடமிருந்து பெற்று உதவி செய்வதாக நடித்து வைத்தியரின் மடிக்கணிணியையும், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக் கொண்டு செல்வதற்கு முற்பட்டபோது வைத்தியர் தன்னை சுதாகரித்துக்கொண்டு கூச்சலிட்டு சத்தம் போட்டபோது மோட்டார் சைக்கிளையும், மடிக்கணிணியையும் கைவிட்டு இரண்டு இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின் குறிப்பிட்ட வைத்தியர் தனது கைத்தொலைபேசி மூலம் நடந்த விடயத்தை நண்பர்களிடம் அறிவித்ததும் அவ்விடத்திற்கு வந்த நண்பர்கள் வைத்தியரையும், காயமடைந்த மற்றவரையும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதாவது இரவு வேளைகளில் தமது கடமைகளை முடித்து வீடுகளுக்கு செல்லும் நபர்களை வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கி, அவர்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten