இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பேராதெனிய பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் 24 வயதுடைய மாணவியே தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
பானுசா சிவப்பிரகாசு எனும் இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் அறிந்து பானுசாவின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten