தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juni 2015

சென்னை சிறப்பு முகாமில் இலங்கையர் மீது தாக்குதல்

உலக தமிழர் பேரவை போரின் போது விடுதலைப் புலிகளுக்கு உதவவில்லை!- சுரேன்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 12:33.52 AM GMT ]
உலக தமிழர் பேரவை, இலங்கை அரசாங்கத்துடன் நான்கு கட்டங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
முதலாவது- இலங்கை தமிழர் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் இணக்கத்துடன் பொது உடன்பாடு.
இரண்டாவது- குடியியல் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது இதில், தென்பகுதியில் உள்ள அரசியல் மற்றும் அரசியல் அற்ற குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படையை விளக்குவது.
மூன்றாவது- சர்வதேச சமூகத்தின் மத்தியில் தெளிவாக்கலை உண்டாக்குவது. இதன்மூலம் போரகை்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை உறுதிப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வது.
நான்காவது- போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியை பெற்றுக்கொடுப்பது என்று சுரேந்திரன் பட்டியலிட்டுள்ளார்.
தமது அமைப்பு, 2011ம் ஆண்டு முதல் இந்த நான்கு கட்ட செயற்பாட்டின் மூலமே இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
போரின் போது தமது அமைப்பு, விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், போரின் பின்னர் 2010ம் ஆண்டே உலக தமிழர் பேரவை, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் வெளியுறவு செயலரினால் ஆரம்பிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமது அமைப்பு இலங்கையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq1D.html

இந்த வருடத்தில் மாத்திரம் 200 இந்திய மீனவர்கள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 03:28.52 AM GMT ]
இந்திய மீனவர்கள் படகுகள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க சில்வா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 200 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 30 படகுகளும் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலான படகுகள் நெடுந்தீவு கடற்பகுதியிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சிறப்பு முகாமில் இலங்கையர் மீது தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 03:43.11 AM GMT ]
சென்னையில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 21ம் திகதி  இடம்பெற்றுள்ளது.
முகாமில் இருந்த இருவரால் 39 வயதான வை.ஸ்ரீஜெயன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர் மகாத்மா காந்தி வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
பணக்கொடுக்கல் வாங்கலே தாக்குதலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq2E.html

Geen opmerkingen:

Een reactie posten