தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juni 2015

இலங்கை விடயத்தில் எரிக் சொல்ஹெய்மின் பின்புலம் இல்லை!- இலங்கை அரசாங்கம்!

இலங்கை பிரதிநிதிகளுடன் நல்லிணக்கம் குறித்து பேச ஆவலாக உள்ளோம்! ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர்
[ திங்கட்கிழமை, 15 யூன் 2015, 08:33.29 PM GMT ]
இலங்கையின் புதிய அரசு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அது சரியாக செயற்படுத்தப்பட்டால் இலங்கையின் ஜனநாயகத்தின் மீதும் சட்டங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் என ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் zeid raad al hussein தெரிவித்துள்ளார்.
இன்று ஐ.நா. சபையில் நடைபெற்ற 29th Regular Session of Human Rights Council 1வது அமர்வில் உரையாற்றுகையிலேயே ஆணையர் Zeid தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில் 

செப்டம்பர் மாதம் நடைபெறும் அமர்வில்  தாக்கல் செய்யவுள்ள  இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமரசம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை  மற்றும் நம்பகத்தன்மை குறித்து  அந்நாட்டின் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளோம்

மேலும் இலங்கை அரசாங்கம் தங்கள் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி  இந்த பணிகளுக்கான முழு ஆதரவு மற்றும் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நான்  கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGSZSUfq0G.html

குடியேறிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் வழங்கிய பதில்!
[ திங்கட்கிழமை, 15 யூன் 2015, 11:54.21 PM GMT ]
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்போர் நாட்டில் இருந்து செல்வதற்கான ஆயத்தங்களை செய்யும் காலக்கட்டத்தில் ஒரு குறுகிய காலத்துக்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குடியேறிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிரான்ஸிஸ் க்ரீபே அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கே அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் தமது குற்றச்சாட்டில் இலங்கையில் வீசா ஒழுங்கு மீறல் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பிரச்சினை, குற்றமாக கருதப்படாது அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதற்கு நேற்றைய ஜெனீவா நிகழ்வில் பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை.
எனினும் அவர்கள் நாட்டில் இருந்து அனுப்பப்படும் வரை அவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.

இலங்கை விடயத்தில் எரிக் சொல்ஹெய்மின் பின்புலம் இல்லை!- இலங்கை அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 12:11.57 AM GMT ]
இலங்கை விடயத்தில் நோர்வேயின், முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித பங்கும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அண்மையில் லண்டனில் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போது அவர் தமது கருத்துக்களை மாத்திரே பகிர்ந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அவை பயனுள்ளவையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயத்தில் எரிக் சொல்ஹெய்மின் பின்புலம் என்ற தலைப்பில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டமை தொடர்பிலேயே அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.
லண்டன் நிகழ்வின்போது எரிக் சொல்ஹெய்ம் மிகக்குறுகிய நேரமே கலந்துரையாடலில் பங்கேற்றார்.
இதன்போது அவர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq1A.html

Geen opmerkingen:

Een reactie posten