மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மையின தமிழர்கள், சித்ரவதைகளை அனுபவித்து வருவதாக மலேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மியான்மரில் வசித்து வரும் ரொஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனத்தாக்குதலால் அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த துன்புறுத்தல்கள் காரணமாக அவர்கள் நாட்டைவிட்டு, மலேசியா, இந்தோனேஷியா தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், மியான்மரில் வசிக்கும் ரொஹிங்யா முஸ்லிம் மக்களை விட தமிழர்கள் பல கொடுமைகளை சந்தித்து வருவதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது, மியான்மரில் உள்ள தமோ மற்றும் தத்தோன் மாவட்டங்களில் வசித்து வரும் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
அங்கு இவர்கள் மீது நடத்தப்படும் இனத்தாக்குதலால், இவர்களும் ரொஹிங்யா முஸ்லிம்களோடு சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழர்களை அழைத்துச்செல்லும் இடைத்தரகர்கள், அங்கு கொத்தடிமைகளாக இவர்களை விற்று விடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் சொத்துக்களை விற்று இடைத்தரகர்களுக்கு கொடுத்துள்ளதாகவும், இறுதியில் மலேசியாவின் பினாங்கு, கெடா, பெர்லிஸ் மாகாணங்களில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.
http://newsonews.com/view.php?22oMC303lOo4e2BnBcb280Mdd3088bc2nBLe43Ol3023gAo3
|
Geen opmerkingen:
Een reactie posten