தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juni 2015

புலிகளா ? அது யார் ? நாங்க அவங்களுக்கு உதவியது இல்லையே: ஜெகா வாங்கும் அமைப்புகள்

இங்கே உள்ள படத்தை ஒரு செக்கன் பாருங்கள்... இவர்கள் கண்களை பாருங்கள். எந்த செக்கனில் எவர் உயிர் போகும் என்று தெரியாமல் இவர்கள் எப்படி எல்லாம் மே 18 துடித்திருப்பார்கள். மானமுள்ள எந்த தமிழனாவது , இதனை மறப்பானா ? இல்லை மன்னிப்பானா ? இப்புகைப்படத்தில் இருக்கும் எவரும் உயிரோடு இல்லை.... உங்கள் அண்ணா தம்பியை , இல்லை தங்கையை இலங்கை ராணுவம் இப்படிக் கொன்றிருந்தால் இன்று , டீ குடிக்க ஆசைப்பட்டு இருப்பீர்களா ?44,000 போராளிகள் கொல்லப்பட்டார்கள். 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். வெறும் 6 வருடத்தில் இதனை மறந்து இலங்கை அரசுடன் சென்று “சிங்கிள் டீ குடிக்க சிக்கியடிக்கும்” தமிழ் அமைப்புகளே ஒரு முறை உங்கள் கைகளை பாருங்கள். ரத்தம் தோய்ந்த உங்கள் கரங்களை பாருங்கள். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் இந்த அமைப்புகளில் உள்ள பலருக்கு தமிழ் எழுதவோ இல்லை வாசிக்கவோ தெரியாது என்பது , படு கேவலமான விடையங்களில் ஒன்று. அவர்களும் தயவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதனைப் படியுங்கள்..

சமீப காலமாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று , சொல்லி சில தமிழ் அமைப்புகள் முனைப்புக் காட்டி வருகிறது. பிரித்தானியாவில் உள்ள இந்த அமைப்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு , நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு இலங்கை அரசோடு பேச முற்படுகிறார்கள். இதேவேளை இவர்கள் புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று தம்மை காட்டிக்கொள்ள வெகுவான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஈழப் போராட்டத்தை எடுத்தால் விடுதலைப் புலிகள் இல்லாத அத்தியாயம் கிடையாது. சுமார் 44,000 ஆயிரம் போராளிகள் வீரச்சாவை தழுவி , ஒரு நிலைக்கு மேலே உயர்த்தியுள்ளார்கள். அதன் மேல் நின்று கொண்டு இவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவு கணக்கே இல்லாமல் போய்விட்டது.
நேற்றைய தினம் உலகத் தமிழர் பேரவை(GTF) தாம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் உதவியது இல்லை என்று அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது. இதுபோக பிரித்தானிய தமிழர் பேரவையும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. மே 18 நிகழ்வுகளுக்கு புலிக்கொடியை(தேசிய கொடியை) கொண்டுவரவேண்டாம் என்று BTF வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது. இன் நிலையில் தான் , யார் இலங்கை அரசோடு ஒட்டுவது என்ற பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இலங்கையில் போராட்டம் நடந்தவேளை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் 95 சதவீகிதமான மக்கள் , போராட்டத்திற்கு உதவி புரிந்தார்கள். புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு ,போராட்டம் வேறு ,என்று எவராலும் பிரித்துப் பார்க முடியாது. அப்படி பிரிக்க நினைப்பது போன்ற முட்டாள் தனமான விடையம் வேறு எதுவும் கிடையாது.
இன்று சிங்கள அரசுடன் நெருங்கிப் பழக , நாம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் உதவியது இல்லை என்று அறிக்கை விடும் “சுரேன்” போன்ற நபர்கள். நாளை இலங்கை அரசு இழுக்கும் போக்கில் எல்லாம்செல்லமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது ? நாம் ஒரு பலமான நிலையில் இருந்துகொண்டு தான் , எமது உரிமைகளை ,அல்லது விடுதலையைக் கோரமுடியும். எம்மை நாமே தரம் தாழ்த்தி , இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மை உள்வாங்கினால் பேச்சுவார்த்தை பிசுபிசுத்துப்போகும். நாடு கடந்த அரசும், TCC போன்ற சிலஅமைப்புகளும் ஒரு கொள்கைப் பற்றோடு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு இறுதித்தீர்வு , தமிழீழம் தான் என்பது அவர்களின் இறுக்கமான முடிவு. மேற்குலகை திருப்திப்படுத்தும் அமைப்புகளான அடையாளம் காணப்பட்டுள்ள அமைப்புகள் BTF மற்றும் GTF அமைப்புகள் ஆகும். அவை ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள். இதனால் புலம்பெயர் சமூகத்திடையே பெரும் குழப்பம் ஒன்று காணப்படுகிறது.
புலம்பெயர் சமூகம் இவ்வாறு இரண்டு பட்டு நிற்க்க இதுவே காரணமாக அமைந்துள்ளது. தமக்கு ஆதரவான சில ஊடங்களை வைத்து , BTF மற்றும் GTF போன்ற அமைப்புகள் , பேச்சுவார்த்தை ஏன் நடத்தப்படவேண்டும் என்று கூறி தமது செயல்பாட்டை நியாயப்படுத்த பெரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். மணி கட்டிய மாடு தலையாட்டுவதை ஏற்றுக்கொள்ள நாம் என்ன முட்டாள்காளா ?
இதற்கு இலகுவான வழி ஒன்று தான் உள்ளது. சமீபத்தில் “ஸ்காட்லாந்தில்” (Scotland Referendum) நடைபெற்ற வாக்கெடுப்பு போல ஒன்றை , தமிழ் ஈழத்தில் நடத்துவதே சிறந்த செயலாகும். பிரிந்து செல்வதா இல்லை , சுயாட்ச்சி வேண்டுமா என்பதனை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும். அதனை நாம் எவ்வகையிலும் அவர்கள் மேல் திணிக்க முடியாது. அதனை நடத்துவதற்கான பெச்சு வார்த்தைகளில் ஈடுபட எவரும் தயார் இல்லை. தற்போது உள்ள இலங்கை நிலவரப்படி , மகிந்தவின் கைகள் மீண்டும் ஓங்கியுள்ளது. இதனால் தேர்தலை நடத்த மைத்திரி விரும்பவில்லை. எப்போது தேர்தல் நடக்கும் என்பது தெரியாது. மகிந்த செல்வாக்கு வீழும் வரை சிங்களவர்களே காத்து நிற்கிறார்கள். ஆனால் அதனை தமிழர்களால் செய்ய முடியவில்லை. அவசரப்பட்டு நான்.. நீ ..என முந்தியடித்து , பேச்சுவார்த்தையில் இறங்குகிறார்கள்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் , இலங்கை அரசாங்கமே ஒரு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. பெரும்பாண்மை இல்லாத அரசாங்கம். அதில் மைத்தியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை. மைத்திரி ரணில் பக்கம் நின்றுகொண்டு தனது கட்சியையும் ஆதாரிக்கிறார். மேற்கு உலகத்தை போறுத்தவரை மற்றும் இந்தியா அமெரிக்காவின் நிலை என்னவென்றால் , இனி வரும் தேர்தலில் மகிந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது அவர்கள் விருப்பம். இப்படி பெரும் குழப்பகரமான சூழலில் இவர்கள் , பேச்சுவார்த்தை என்று சொல்லி “ஒரு சிங்கிள் டீ குடிக்க சிங்கியடித்து” அலைவது மிகவும் கேவலமாக உள்ளது என்பது தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாத விடையம் அல்லவே ...
http://www.athirvu.com/newsdetail/3758.html

Geen opmerkingen:

Een reactie posten