[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 11:29.28 AM GMT ]
குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஊடகங்களுக்கு அறித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவே நாட்டுக்கு பொருத்தமான பிரதமர்!- விஜேதாஸ ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 12:01.32 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
100 நாட்கள் என கூறி 200 நாட்களை பெற்றுக்கொண்டது ஆரோக்கியமான செயல் அல்ல. எனினும் வெகு விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்வதனை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
ஜனாதிபதிக்கு அவசியமான எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவருக்காக செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆயத்தமாகவே உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு ஒருவரும் இப்பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல.
ரணில் விக்ரமசிங்கவை தவிர நாமல் அல்லது மேர்வின் அப்பதவிக்கு பொருத்தமானவர்களா என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐ.தே.கவில் மீண்டும் இணைய பல முயற்சிகளை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 11:48.33 AM GMT ]
ஊடகத்துடன் நெருங்கி செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த அரசாங்கத்தில் ஊடக பேச்சாளராக செயற்பட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அவர் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து கண்டி மற்றும் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முக்கியஸ்தர்கள் இதற்கு பாரிய அளவிலான எதிர்ப்பை வெளியிட்டமையினால் குறித்த முன்னாள் அமைச்சரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் அரசியல் குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதற்காக தற்போது வரையில் பிரபல நடிகையின் ஆதரவு பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நடிகை ஐக்கிய தேசிய கட்சியுடன் அதிக தொடர்பு வைத்திருப்பதனால் அவர் ஊடாக தனது மனவேதனைகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாக தெரியவந்துள்ளது.
எனினும் கட்சி சிரேஷ்டர்களின் நிராகரிப்பு காரணமாக இக்கோரிக்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq5G.html
Geen opmerkingen:
Een reactie posten