ஈழ அகதி படகின் மாலுமிகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் லஞ்சம் வழங்கியமை குறித்து விளக்கமளிக்க கோரி, அவுஸ்திரேலிய செனட் சபையில் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. பசுமை கட்சியினால் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் பயணித்த படகின் மாலுமிகளுக்கு லஞ்சம் வழங்கி அவர்களை திருப்பி அனுப்பியதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்தோனேசிய காவற்துறையினர் இதனை உறுதி செய்துள்ளனர். எனினும் இதனை அவுஸ்திரேலிய பிரதமர் மறுத்துள்ளார். இந்த நிலையிலேயே அது குறித்த உண்மையை வெளிப்படுத்த வலியுறுத்தி, பசுமை கட்சி இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten