தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

ஐதேகவின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் இரகசிய பேச்சு

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று வேட்பு மனு தாக்கல்!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:45.14 PM GMT ]
வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று  முற்பகல் பத்து மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய கிளிநொச்சி அமைப்பாளர் வைத்தியநாதன் தவநாதன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வைத்தியநாதன் தவநாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன், கந்தசாமி பிரகலாதன், ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கீதாஞ்சலி வேணுகோபால், ஏ.விஜயகிருஸ்ணன், ரி.தர்மசிறி மற்றும் மாரிமுத்து மகாதேவன் ஆகியோரும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களாக வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
முன்னதாக இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் சகிதம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் கட்சியின் பிரமுகர்கள் சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் சகிதம் மாவட்டச் செயலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐதேகவின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் இரகசிய பேச்சு
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:49.11 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித ரங்கே பண்டார, அசோக அபேசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசியமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டில் இந்த ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அசோக அபேசிங்க, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியின் கட்டுப்பாட்டை மீறியாக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கட்சிக்குள் அதிருப்தி கொண்டுள்ள இவர்கள், கட்சியை விட்டு விலகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மேற்படி இரகசிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள தெரிவித்தன.
அதேவேளை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாக கூறிவருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Geen opmerkingen:

Een reactie posten