[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:17.51 PM GMT ]
ஜாஎல, பள்ளிவீதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிகே தொன் சந்த்ராணி என்ற 54 வயது பெண்ணுக்கே நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நீண்ட வழக்கு விசாரணையின் பின் 8 வருடம் விளக்கமறியலில் இருந்த நிலையில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஜூலை 8ம் திகதி இந்தியாவிலிருந்து இப்பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய போது இவரில் சந்தேகம் கொண்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இவரது பொதிகளை சோதனை செய்தபோது இவர் கொண்டுவந்த பாக்கில் இருந்து 474 இடுப்புப் பட்டிகளில் சூசகமான முறையில் ஹெரோயின் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றில் சுத்தமாக ஹெரோயின் 141.8 கிராம் இருந்ததாக தெரிய வந்தது.
இவர் மீது போதைப் பொருளை கடத்தி வந்தமை தன்வசம் வைத்திருந்தமை வியாபாரம் செய்கின்ற ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரப்பட்டன.
குற்றவாளியாகக் காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை வழங்கி தனது தீர்ப்பை அறிவித்தார்.
கொலை செய்த குற்றத்திற்காக 6 பேருக்கு மரண தண்டனை- ரயிலின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 01:21.07 PM GMT ]
2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று நடைபெற்றன.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
ரயிலின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற பொடிமெனிக்கே ரயிலின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் ஹப்புத்தளையில் இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 35 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten