[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:35.38 AM GMT ]
நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹிரூனிகா பிரேமசந்திர தன்னை எதிர்த்து தொடர்ந்து பிரசாரம் செய்திகிறார்.
இதன் மூலம் பிரபல்யம் அடைய முடியும் என்று அவர் கருதுகிறார்.
அவர் தமது அரசியல் வாழ்க்கையை ஸ்தீரப்படுத்திக் கொள்ளவே இவ்வாறு செய்கிறார்.
எனினும் ஒரு அட்டையைப் போல என்னை உறுஞ்சாமல், அவரது அரசியல் பணிகளை மாத்திரம் பார்த்துக் கொள்ளுமாறு தாம் அவரிடம் கோருவதாகவும் துமிந்தசில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை சமாளிக்க இந்திய ஜனாதிபதி உதவி வழங்கி வருகின்றார்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:34.47 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே உதவி வழங்கி வருவதாக உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொது நலவாய நாடுகளின் மாநாட்டை இந்த ஆண்டு இலங்கையில் நடத்தக் கூடாது என்ற அழுத்தம் அதிகரித்திருந்த போதும், இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படும் என்ற தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என்று அதன் பொது செயலாளர் கமலேஸ் சர்மா அறிவித்திருந்தார்.
இதன் பின்னணியில் பிரனாப் முகர்ஜி இருப்பதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதனை இலங்கையில் வெளியுறவுகள் துறை அமைச்சு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்தள்ளது.
இலங்கை தொடர்பிலான இந்தியாவின் பல்வேறு தீர்மானங்களின் பின்னணியிலும் ஜனாதிபதியை பாதுகாக்கும் தேவதையாக பிரனாப் முகர்ஜீ செயற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான உறவு கடந்த யுத்த காலத்தில் இருந்து ஆரம்பித்தது.
யுத்தத்தின் இறுதி நாளுக்கு முன்னதாக பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இரண்டு மணித்தியாலங்களுக்குள் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten