தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா உதவி


அசாத் சாலி கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:39.31 AM GMT ]
அசாத் சாலி நீதிக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு ஒன்று செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அசாத் சாலியின் மகள் அமீனா இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது தந்தை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
எனினும் அவரது கைது நீதிமுறைக்கு ஏற்ப நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இதற்கு எதிராக தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்யவிருப்பதாகவும், அத்துடன் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா உதவி
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.59 AM GMT ]
இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாம்களின் மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது.
அமெரிக்காவின் குடிப்பெயர்வு, சனத்தொகை மற்றும் அகதிகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள பல்வேறு முகாம்கள் உள்ளன.
அவற்றில் உள்ள இலங்கையர்களின் பல்வேறு தேவைகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த நிதி வழங்கப்படப்வுள்ளது.
அகதி முகாம்களில் பால்நிலை பேதங்களை தவிர்த்தல், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்தல், சிறுவர்களின் கல்வி நிலை மற்றும் சிறந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்க வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten