[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:08.23 AM GMT ]
சிறப்புரிமை கேள்வி, இடைக் கேள்விகள் எழுப்புவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
ஜனாதிபதியினால் மின்சார கட்டணங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவினால் இன்று மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
அவைக்கு மதிப்பளத்து செயற்பட வேண்டியது அனைத்து உறுப்பினர்களினதும் கடமையாகும்.
நாம் கேள்வி எழுப்பும் முறை நடந்து கொள்ளும் விதம் குறித்து பாடசாலை மாணவ மாணவியர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதித்துறையில் நாடு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது – லக்ஸ்மன் கிரியல்ல
ஏற்றுமதித் துறையில் நாடு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களிலும் காணப்பட்ட ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் பாரியளவில் ஆடைக் கைத்தெழிற்சாகைலள் மூடப்பட்டுள்ளதுடன் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடிய அளவிற்குக் கூட அரசாங்கத்திடம் பணமில்லை.
அரசாங்க திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் நட்டமடைந்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் நான்கு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை – தமிழ்த் தேசியக் கூட்டபைம்பு
வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
விவசாயம் செய்வதற்காக ஆபரணங்களை விவசாயிகள் அடகு வைக்க நேரிடுகின்றது.
அவற்றை மீட்பதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வரட்சி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
எனினும், தமிழ் விவசாயிகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.
தமிழ் மக்களி; விவசாய காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் பெயரைச் சொல்லி சொல்லியே அரசாங்கம் செயற்படுவதாகவும் உரிய அபிவிருத்தி ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டண நிவாரணங்கள் தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த யோசனை குறித்து மீளாய்வு! (செய்தித்துளிகள் -2)
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:28.57 AM GMT ]
நேற்றைய தினம் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், இன்றைய தினத்திற்கு மீளாய்வு நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் தமது பிரேரணைகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.
இதன்மூலம், 60 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை நுகரும் வாடிக்கையாளர்களுக்கு 33 சதவீதம் மின்சார கட்டணம் அதிகரிக்கும் வரையில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணம், குறித்த பிரேரணை நிராகரிக்கப்பட்டதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனையடுத்தே இலங்கை மின்சார சபை மீண்டும் கட்டண திட்டம் ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
மீன் உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு திட்டம்! மீன்பிடித்துறை அமைச்சு
ஆழ்கடல் மீன்பிடி மற்றும் டூனா மீன்னுற்பத்திகளை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும், சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் இதற்கான கப்பல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதிகளை 250 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் டூனா மன்னன் என்று அறியப்படும் கியோஷி கிமுரா என்பவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் மீன்பிடித்துறை மேம்பாடு குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடியின் போது 4 கப்பல்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதில் அவர் மிகுந்த அனுபவம் பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து 20 கப்பல்கள் மீன்பிடிக்காக பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதவிர, 20 சீனக் கப்பல்களையும் இலங்கையில் இருந்து செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இருநாட்டு கப்பல்களும் இலங்கை கொடியுடனேயே மீன்பிடியில் ஈடுபடவுள்ள நிலையில், தரையை அடைந்ததும் மீன்வளம் பிரிக்கப்பட்டு இலங்கையில் இருந்து ஏற்றுமதிக்கு தயார் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten