[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 01:55.22 AM GMT ]
பொதுமக்களை தொடர்ந்தும் முட்டாள்களாக்கும் செயற்பாட்டை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
எனினும் அதில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதையே மின்சாரக் கட்டண உயர்வின் போது மக்கள் மத்தியில் இருந்து எழுந்த கருத்துக்கள் உணர்த்தியுள்ளன.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் குருநாகல், ஸ்ரீகோத்தா மற்றும் பதுளை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களையும் பொருட்படுத்தாது அரசாங்கத்துக்கு எதிராக திரண்டமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சிந்திக்க வைத்துள்ளதாக ஆங்கில பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் செப்டம்பர் முதல் வாரத்தில் இடம்பெறும்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 01:21.50 AM GMT ]
ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிடுவார் என்று இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்சவை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாழ்வின் எழுச்சி என்ற திவிநெகும என்ற சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, வடக்கு மாகாணசபையின் அனுமதி அதற்கு கோரப்பட்டது.
எனினும் அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, வடக்கு மாகாணசபையின் அமைப்பு இன்னும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்
இந்தநிலையில் செப்டம்பர் முதல்வாரத்தில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி வடக்கு மாகாணசபையை அரசியல் அமைப்புக்குள் கொண்டு வருவது என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
எனினும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று கோரிக்கைகளை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten