தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

பொலிஸாரின் ஜீப் வண்டி மீது கல் எறிந்த இளைஞர்கள் கைது! அட்டாளைச்சேனையில் சம்பவம்!


மட்டக்களப்பில் காணி அபகரிப்பிற்காக பிரதேச செயலாளர்களை இடமாற்றும் செயற்பாடுகள் தீவிரம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 04:48.26 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரதேச சபைகளில் முஸ்லிம் குடியேற்றங்களை செய்யும் வகையிலும் காணிகளை அபரிக்கும் நோக்கத்திலும் அதற்கு எதிராக இருக்கும் பிரதேச செயலாளர்களை இடமாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காணி அபரிக்கப்படும் இடங்களில் முதல் இடத்தில் உள்ள ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜாவை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் காத்தான்குடியை சேர்ந்த முக்கிய அரசியல்வாதியொருவர் தீவிர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலத்தில் ஆரையம்பதியின் பல பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை கொண்டு குடியேற்றியதுடன் மேலும் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் அபகரிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தவேளையில் குறித்த பிரதேச செயலாளரை இடமாற்றவேண்டாம் என ஆரையம்பதியில் உள்ள பொது அமைப்புகள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர்களை அனுப்பியுள்ளன.
ஆரையம்பதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக ஆரையம்பதி பிரதேச செயலகமும் முஸ்லிம் பிரதேச செயலகமாக எதிர்காலத்தில் மாறக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்த பகுதியில் தமது சந்ததிகளுக்கு நிலம் பெறமுடியாத நிலையில் முற்றாக முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டு காத்தான்குடியுடன் இணைக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிரான் பிரதேச செயலக பிரிவில் காணி அபகரிப்பு செய்யமுற்பட்டபோது அங்கிருந்த பிரதேச செயலாளர் தவராசா வவுணதீவுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதியில் தற்போது தாராளமாக காணி அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இடம்மாற்றம் செய்யும் நிலையேற்பட்டால் அதனை தடுப்பதற்காக பாரிய வெகுஜன போராட்டங்களை நடத்தப் போவதாக ஆரையம்பதி பிரதேச மக்கள் தெரிவிகின்றனர்.
அண்மையில் ஆற்றல் பேரவையினால் நடத்தப்பட்ட மே தின நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தனால் விடுக்கப்பட்ட செய்தியில் ஆரையம்பதியின் இன்றைய நிலையை வெளிக்காட்டியுள்ளன.

பொலிஸாரின் ஜீப் வண்டி மீது கல் எறிந்த இளைஞர்கள் கைது! அட்டாளைச்சேனையில் சம்பவம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 12:47.40 AM GMT ]
இலங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்படுத்திய இரு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை பிற்பகல்  3.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரின் ஜீப் வண்டி மீது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

Geen opmerkingen:

Een reactie posten