தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வு விடயத்தை வலியுறுத்தப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவிப்பு


தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் காணிகள் வெளியோருக்கு பகிர்ந்தளிக்கத் திட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 02:38.02 AM GMT ]
இலங்கையின் தமிழ் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பெருந்தோட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை கிராம இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் இந்த வாரத்துக்குள் முடிவாக்கப்படவுள்ளது.
பத்திரிகை ஒன்றின் வர்த்தக பகுதியில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்காகவே இந்தக்காணிகள் பெருந்தோட்டங்களுக்கு வெளியில் வசிக்கும் இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தமிழர்கள் வசிக்கும் பெருந்தோட்டங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அரசாங்கம் கடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக நிதியமைச்சு 100 மில்லியன் ரூபாய்களை விடுவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை தமிழ்த் தோட்ட தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகங்களும் எதிர்த்துள்ளன.
இந்த திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்ட திட்டம் என்ற அடிப்படையில் பல பிரச்சினைகளை இந்த திட்டம் கொண்டு வரும் என்று தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான பி திகாம்பரம், ராதாகிருஸ்ணன் போன்றோர் எவ்வித எதிர்ப்பு யோசனைகளை அரசாங்கத்திடம் இதுவரை முன்வைக்கவில்லை என்று தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வு விடயத்தை வலியுறுத்தப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 02:24.04 AM GMT ]
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தீவிரமாக வலியுறுத்தப் போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கான முடிவு கடந்த மே தினத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
இதன்படி 13வது அரசியலமைப்பின் அம்சங்களை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று தமது கட்சி, வலியுறுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவை தமது கட்சி மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
தமது கட்சி அரசாங்கத்தின் அங்கமாக இருந்தபோதும் மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து செயற்படப் போவதாக அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten