தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்படுவதாக குற்றச்சாட்டு


குவைத் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் பலருக்கு எதிராக வழக்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:23.47 AM GMT ]
குவைத் சென்ற இலங்கைப் பணிப் பெண்கள் பலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய பல இலங்கைப் பெண்களுக்கு எதிராக எஜமானர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குவைத்திற்கான இலங்கைத் தூதுரகத்தில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் பெண்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கு எதிராக குவைத் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சில எஜமானர் கடவுச் சீட்டுக்களைக் கூட வழங்கவில்லை. பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் பணிப் பெண்கள் நாடு திரும்ப முடியாது நிர்க்கதியான நிலையில் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்படுவதாக குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:28.10 AM GMT ]
நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று தசாப்த காலமாக இலங்கையில் சேவையாற்றி வரும் முன்னணி அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் இணைந்து இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளும், இராஜதந்திரிகளும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் கடும் போக்கு அமைப்புக்களுடன் இந்த அரச சார்பற்ற நிறுவனம் நீண்ட காலமாகவே தொடர்களைப் பேணி வருகின்றது.
1984ம் ஆண்டு முதல் இந்த அரச சார்பற்ற நிறுனம் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten