தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

யாழில் இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது!- ஜகத் ஜயசூரிய!


ஐக்கிய நாடுகளால் இலங்கை கிரிக்கெட்டுக்கும் பாதிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:56.54 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மலேசியா வாக்களித்தமை, சிறிலங்கா கிரிக்கெட்டின் வருமானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கான அனுசரணையாளர்களின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அடுத்த மாதம் முதல் டயலொக் எக்சியாட்டா மற்றும் இலங்கை தேயிலை சபை என்பன அனுசரணை வழங்கவுள்ளன.
இதற்காக 1.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. டயலொக் எக்சியாட்டா நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமாகும்.
ஏற்கனவே மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் மலேசியா வாக்களித்திருந்த நிலையில், அந்த நாட்டின் நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா கிரிக்கெட் உடன்படிக்கை ஏற்படுத்தக்கூடாது என்று சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உடன்படிக்கை ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அனுசரணையாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, இரண்டு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த காரணங்களில் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு 700 மில்லியன் ரூபாய் வரையில் இழப்பு ஏற்படலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில் இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது!- ஜகத் ஜயசூரிய
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:45.04 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் இராணுவக் குடியிருப்பொன்று அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் இராணுவ முகாம்களில் மூன்றைத் தவிர்ந்த ஏனைய முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட உள்ளது. ஏனைய முகாம்களை அகற்றி குறித்த இராணுவக் குடியிருப்பில் இந்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
அகற்றிக் கொள்ளப்படும் இராணுவம் முகாம்கள் அமைந்துள்ள காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள இந்த இராணுவ குடியிருப்பில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
இதனால் காணிகளை இழக்கும் மக்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும்.
இராணுவ முகாம்கள் அகற்றிக் கொள்ளப்படும் பிரதேசங்களின் சட்டம் ஒழுங்கு நிலைமை முழுமையாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten