தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர்!- சிங்கள ஊடகம்!


பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:17.47 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்படி மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர்!- சிங்கள ஊடகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 02:15.24 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பதனை புலம்பெயர் தமிழர்களே தீர்மானித்து வருகின்றனர்.
அதிகளவு சட்டத்தரணிகளை வேட்பாளர்களாக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரனை நியமிக்கத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.
தேர்தலில் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதற்காக கோடிக் கணக்காண பணத்தை செலவிட புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு பாரியளவு பணத்தை வழங்கத் திட்டமிட்பபட்டுள்ளது.
இதன்படி பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 30000 ரூபாவும், கிராம மட்ட இளம் தலைவர்களுக்கு 25000 ரூபாவும் வழங்கத் தி;ட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten