தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

பெற்றோரிடம் சொல்லாமல் ஜனாதிபதியைப் பார்க்க கொழும்பு சென்ற மூன்று மாணவிகள் பொலிஸாரினால் கைது!

மட்டக்களப்பில் முன்னாள் நீதவான் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 12:00.26 PM GMT ]
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
நேற்று பிற்பகல் அரசடியிலுள்ள வீட்டிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் குறித்த பெண்ணின் மகன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துபார்த்தபோது குறித்த பெண் தூக்கில் தொங்கியுள்ளதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பிலான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கியல் தொங்கிய பெண் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரிடம் சொல்லாமல் ஜனாதிபதியைப் பார்க்க கொழும்பு சென்ற மூன்று மாணவிகள் பொலிஸாரினால் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 12:03.59 PM GMT ]
ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
பேராதனை பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் மூன்று பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பார்க்கும் ஆவலுடன் புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் இது தொடர்பில் பெற்றோருக்கு அறிவிக்காததுடன் பள்ளி முடிந்ததுடன் சீருடையுடனேயே கொழும்பு நோக்கி தமது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இவர்களில் 2 பேர் குருணாகலை வரை இதற்காக வந்துள்ளதுடன் ஒரு மாணவி பயணத்தின் இடைநடுவிலேயே வீட்டுக்குத் திரும்புவதாக கூறி மீண்டும் கண்டி நோக்கி பயணமாகியுள்ளார்.
இந்நிலையில் பிள்ளைகளைக் காணாத பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை குருநாகல் பஸ் நிலையத்தில் வைத்து குறித்த மாணவிகள் 2 பேரையும் இரவு 10 மணியளவில் கைது செய்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஜனாதிபதியை சந்திக்கும் பொருட்டே தாம் கொழும்பு நோக்கி பயணமானதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து பிரிந்து மீண்டும் கண்டிக்கு பயணமான மாணவி நேற்று கண்டியில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten