தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாடு!

இக்கட்டான நிலையில் இலங்கை அரசாங்கம்: எதிர்க்கட்சி சாடல்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:40.40 AM GMT ]
அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதே எமது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொர்னாண்டோ தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நிலைப்பாடு அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதேயாகும்.
தற்போது அரசாங்கம் செய்வதறியது திணறிக் கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தையும் எதிர்க்க முடியாத அதேவேளை, வடக்குத் தேர்தலை நடத்த வேண்டிய சிக்கலான ஒரு நிலையை அரசு எதிர்நோக்கியுள்ளது.
13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் ஒரு திரைப்படமாகவே உபயோகிக்கப் பார்க்கின்றது. மக்களின் நலனுக்காக இது கொண்டுவரப்படவில்லை. எனினும் வடக்கு மக்களுக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களுக்கு சாதாரண ஒரு தீர்வினையாவது பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தலைவர் பிரபாகரனை கோழை என தெரிவித்த, அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக முறைபாடு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:05.25 AM GMT ]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றை தொடுத்துள்ளார்.
கடந்த 20ம் திகதி அமைச்சர் நாராயணசாமி விடுத்த அறிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கோழை எனவும் அவர் பெண்களையும் சிறுவர்களையும் மனித கேடயமாக பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கூற்றானது பொறுப்பில்லாத ஒன்றாகும் எனவும் இறந்துபோன ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதாகும் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நாராயணசாமிக்கு எதிராக இந்திய தண்டனைக் கோவை பிரிவு 153( ஏ) யின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten