போரின் பின்னர் மக்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கிறிஸ்தவ சகோதரத்துவம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசரை பணி நீக்கியமை, தீர்ப்பின் மத்தியில் திவி நெகும சட்டத்தை நிறைவேற்றியமை உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்களினால் நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. போர் நிறைவடைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் போருக்கான முக்கிய காரணிகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
சர்வகட்சிப் பேரவையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதிகாரப் பகிர்வின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என கிறிஸ்தவ சகோதரத்துவம் சுட்டிக்காட்டியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten