[ திங்கட்கிழமை, 06 மே 2013, 08:47.53 AM GMT ]
இலங்கை நீதிபதிகளில் ஒருவர் இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தில் சக நீதிபதிகளைத் திட்டியதுடன், குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்காக கடந்த ஏப்ரல் 17 தொடக்கம் 24 வரை இந்தியாவில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.அதில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 10 நீதிபதிகள் இந்தியா சென்றிருந்தனர்.
அம்மாநாட்டுக்காக இந்தியா சென்றிருந்த இலங்கை மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் நாடு திரும்பும்போதே விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நீதிபதியின் இந்நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நீதிபதி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சுமார் 10 நிமிடங்கள் வரை சக நீதிபதிகளைத் திட்டி விட்டே சக நீதிபதி ஒருவரை நோக்கி தண்ணீர் போத்தலால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தினை விமான நிலையத்தில் கூடியிருந்த வெளிநாட்டு பயணிகள் பலரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீது தாக்குதல்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 10:29.21 AM GMT ]
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை முதல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டர் சைக்கிள்களில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீது கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மண்வெட்டி பிடிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இருவரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten