தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் மகாராணி சார்பாக இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பு!!


அஸாத் சாலி கைதுக்கு எதிராக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம்! இராணுவம் வேண்டுகோள்!
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 12:00.15 AM GMT ]
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள  இன்று வியாழக்கிழமை இத் துண்டுப் பிரசுரத்தில் வியாபார நிலையங்கள், பாடசாலைகள், காரியாலயங்கள் மற்றும் வங்கிகளை மூடி ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை ஹர்த்தால் அனுஷ்டிக்கவோ இயல்பு நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என இராணுவத்தினர் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்றுக் காலை சித்தாண்டி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுக்குமாறு படையினர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸாத் சாலி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாகக் கருதப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இதற்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.
எனவே இதுவிடயத்தில் மக்களை அறிவூட்டுவதும் ஹர்த்தாலுக்கு துணைபோக வேண்டாம் எனக் கோருவதும் பள்ளிவாசல் சம்மேளனங்களினது கடப்பாடாகும் எனவும் இராணுவத்தினர் இச் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் மகாராணி சார்பாக இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பு
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 12:15.41 AM GMT ]
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மாகாராணி சார்பில், இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்வார் என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.
நீண்டதூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய மகாராணி எடுத்திருக்கும் இத்தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இளவரசர் சார்ள்சை வரவேற்பதாக கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வுகளில் மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமையையும் கமலேஷ் சர்மா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகாராணியின் இந்தத் தீர்மானத்துக்கு பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மதிப்பளிக்கின்றன. பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில் இந்த அமைப்புக்கு மகாராணி தொடர்ந்து வழங்கிவரும் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்புக்கு நாம் மதிப்பளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் தனது பிரதிநிதியான இளவரசர் சார்ள்சை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அனுப்பியதன் மூலம் மகாராணியின் ஒத்துழைப்பு தொடர்ந்துள்ளது.
பொதுநலவாய அமைப்புக்கும், இளவரசர் சார்ள்சுக்குமிடையில் பல வருடங்களாக நெருக்கமான தொடர்புகள் உள்ளன. பொதுநலவாய அமைப்பின் செயற்பாடுகளுக்கு அவர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
2007ம் ஆண்டு உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிலும் இளவரசர் சார்ள்ஸ், மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு நன்கு அறியப்பட்டவரான இளவரசர் சார்ள்ஸ் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், அவரை வரவேற்பதாகவும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten