[ புதன்கிழமை, 08 மே 2013, 05:29.04 PM GMT ]
34 வயதான நிசார் அஹ்மட் என்ற இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி இலங்கை வந்தப்பின்னர் மீண்டும் போலியான வீசா ஒன்றின் மூலம் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஆந்திர பிரதேசத்தில் உரிய விசா அனுமதியின்றி வசித்து வந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி இந்திய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் விரைவில் இலங்கை அதிகாரிகளால் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிடிஐ செய்திசேவை தெரிவித்துள்ளது.
நில உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு குடியிருப்போருக்காக பிரித்தானிய அமுல்படுத்திய புதிய சட்டம்!
[ புதன்கிழமை, 08 மே 2013, 05:24.42 PM GMT ]
வருடந்தோறும் புதிய புதிய சட்ட அமுலாக்கங்களைக் கொண்டுவரும் பிரித்தானிய நில உரிமையாளருக்கான ஒரு புதிய சட்டத்தையும் இன்று அமுல்படுத்தியுள்ளது.
பிரித்தானிய விசா இல்லாதோர் வீடு, அறைகள் வாடகைக்கு எடுக்க முடியாது என பிரித்தானியாவில் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
புpரித்தானியாவிலுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்யும் பொழுது அதனை கொள்வனவு செய்பவரின் குடிவரவு நிலைமையினை புதிய சட்டதிட்டங்களிற்கமைய பரிசீலலைனை செய்ய வேண்டுமென பிரிதானிய மகா ராணி தனது உரையில் தெரிவித்தார்.
குடிவரவு தொடர்பிலான புதிய சட்ட மூலம் இன்று பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டது.
இப்புதிய சட்டத்திற்கமைய சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்யும் பொழுது அதனை கொள்வனவு செய்பவரின் குடிவரவு நிலைமையினை பரிசீலனைச் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகளிற்கு சொத்துக்களை விற்பனைச் செய்தால் இப்புதிய சட்டத்திற்கமைய சொத்து உரிமையாளர்களிடமிருந்து ஆயிரம் ஸ்ரேலிங் பவுன்ஸ் அபராதம் அறவிடப்படும். இச்சட்டம் தற்பொழுது பலரினதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நில பிரபுக்களை பணயம் வைத்து அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள இவ் சட்ட மூலத்தை ஏற்றுக்கொள்ள இயலாதென ஆர்.ஐ.சி.எஸ் சின் நிறைவேற்று அதிகாரியான ஸ்டிபன் தொர்டன் தெரிவித்துள்ளார்.
நில பிரபுக்களிடமிருந்து அதிகளவு வரி வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே அரசாங்கத்தினால் இப்புதிய சட்ட மூலம் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. தன்னார்வத்துடன் சொத்துக்களை வாங்க முற்படும் நிலகொள்வனவாளர்களின் அளவிலும் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்துமென அவர் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கமானது வாடகைப் பணத்தினை அதிகரிக்கச் செய்யாது இருக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
தன்னார்வ நில விற்பணர்களிற்கு இது தொடர்பாக போதிய பயிற்சி வழங்காதவிடத்து அவர்கள் பாரிய சவாலை எதிநோக்க நேரிடும்.
இச்சட்ட மூலம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் மகா ராணியாரின் உரையில் தெரிவிக்கப்படவில்லை.
அதாவது நிலபிரபுக்கள் மாத்திரமன்று நிர்வாக நிறுவனங்கள் அல்லது முகவர்களுக்கும் இச்சட்டமூலம் உரித்தாகுமாவென தெளிவாக குறிப்பிடப்படவில்லையென அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten