[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:06.19 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் கறுப்புப் பெட்டியை தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னார் இரணைதீவு பிரதேசத்தில் வைத்து இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தேசிய படை வீரர்களை நினைவுகூரும் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரகடனப்படுத்தப்பட்டது.
லயன் எயார் அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை புலிகள் உடனடியாக அகற்றிக் கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுழியோடிகள் தாக்குதல் இடம்பெற்று 48 மணித்தியாலங்களுக்குள் குறித்த பெட்டியை எடுத்துச் சென்றுள்ளனர்.
இரகசியங்கள் வெளியாகும் என்ற காரணத்தினால் இவ்வாறு கறுப்புப் பெட்டி அகற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி லண்டனிலிருந்து பிரசுரமான தமிழ் கார்டியன் என்ற இணைய தளம் இதனை உறுதி செய்துள்ளது.
தேசிய படை வீரர்கள் மாதம் நேற்று ஜனாதிபதியினால் பிரகடனம்!
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 12:26.52 AM GMT ]
மே மாதம் 08ம் திகதி முதல் ஜூன் மாதம் 08ம் திகதி வரையில் தேசிய படை வீரர் நினைவு மாதம் நினைவுகூரப்படுகின்றது.
2008ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மன்னாரில் உயிர்த் தியாகம் செய்த மேஜர் உடுகமவின் மகள் ஜனாதிபதிக்கு படை வீரர்கள் நினைவாக முதல் கொடியை அணிவித்தார்.
படை வீரர்களின் குடும்பங்களின் நலன் கருதி ஜனாதிபதி ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விருதும் வழங்கப்பட்டது.
இதன்போது, கடந்த வருடம் கொடிகள் விற்பனையில் கிடைத்த நிதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு, அந்த நிதியை படை வீரர்களின் நலனுக்குப் பயன்படுத்தும் வகையில் உரிய அதிகாரிகளிடம் கையளிக்க்ப்பட்டது.
இந்த வைபவததில் பிரதமர் தி.மு. ஜயரத்ன, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மௌலானா உட்பட சகல மாகாண ஆளுநர்களும் படை வீரர்களின் நலன்புரி அமைப்பின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten