2 மாறு பட்ட கருத்துக்கள் பலமாக இருப்பதால் அவர் என்ன செய்வது என்பது தொடர்பாக கடுமையாக ஆராய ஆரம்பித்துள்ளார் என, பிரித்தானிய நாளிதழான டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவர் தனக்கு நெருக்கமான பலரிடம் இதுகுறித்து அபிப்பிராயங்களை கேட்டறிந்துவருகிறார் என்றும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுடனும் இது தொடர்பாகப் பேசவிருப்பதாகவும் டெலிகிராப் மேலும் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பல தமிழர்கள் தம்மை கார்சர்வேட்டிவ் கட்சியில், லேபர் கட்சியில் மற்றும் லிபரல் கட்சியில் இணைத்துக்கொண்டு, பெரும் பிரமுகர்களாக தமிழ் மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இவர்கள் இதுதொடர்பாக என்ன நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. இது ஒருபுறம் இருக்க பல தமிழ் கவுன்சிலர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் மகாராணிக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடாது ?
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை, போர் குற்ற ஆதாரங்களை மகாராணிக்கு அனுப்பி அதனூடாக அவர் இலங்கை செல்வதை தடுக்க முடியவில்லை என்றால் நாம் ஏன் தமிழராக வாழவேண்டும் ? பிரித்தானியாவில் உள்ள 4 லட்சம் தமிழர்களோடு கனடா நாட்டு தமிழர்களும் இணைந்து தபால்(கடிதம்) மூலம் ஒரு போராட்டத்தை ஏன் ஆரம்பிக்க முடியாது. 4 லட்சம் கடிதங்கள் மகாராணியின் அலுவலகத்தை நிறைத்தால், அவரால் என்ன செய்ய முடியும் ? மக்கள் போராட்டத்துக்கு மதிப்புக்கொடுத்துத் தானே ஆகவேண்டும் ! எனவே தமிழ் அமைப்புகள் யாவும் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது அல்லவா ? இதனை ஏதாவது ஒரு தமிழ் அமைப்பு முன் நின்று நடத்தவேண்டும் ! நடக்காத ஒன்றை நாம் கூறவில்லையே ! நடந்த படுகொலைகளுக்கு நீதிவேண்டும் என்று தானே கேட்க்கிறோம் !
Geen opmerkingen:
Een reactie posten