[ வியாழக்கிழமை, 09 மே 2013, 05:45.17 AM GMT ]
அசாத் சாலியை கைது செய்துள்ளமை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அரசின் பின்னால் இருந்து செயற்படுகின்ற பேரினவாதிகள் தமிழர்களை நசுக்குவது போன்று முஸ்லிம்களையும் நசுக்கி கேவலப்படுத்தும் வேலைகளை தொடர் முயற்சியாக செய்து வருகின்றனர்.
பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தட்டிக் கேட்ட அசாத் சாலியை கைது செய்து முஸ்லிம்களின்; குரல்களையும் அடக்கியாள விரும்புகின்றனர். ஆதலால் இந்த அரசாங்கத்தோடு முஸ்லிம் இருப்பதில் எந்தவித பயனுமில்லை. முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டு வெட்கித் தலை குனியும் தலைமைகள் இந்த சமூகத்திற்கு தேவையில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறும் இவ்வேளையில் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தினை புகட்டி முஸ்லிம் சமூகத்தின் பலத்தினையும் காட்டியிருப்பார்.
இந்த அரசாங்கமும் இருந்திருக்காது அராஜக வெறி கொண்ட பேரினவாதிகளின் குரலும் மேலோங்கி இருக்காது என்பதை புரிந்து கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கிம் செயற்பட வேண்டும்.
முஸ்லிம்கள் ஒரு போதும் ஆயுதம் ஏந்தி போராடவுமில்லை. தனி நாடு கேட்கவுமில்லை. மற்றவர்களின் மதத்தில் கை வைத்து அம் மதத்தினை பின்பற்றும் மக்களையும் கேவலப்படுத்தவுமில்லை.
முஸ்லிம்கள் கலாசார உடைகளை அணிந்து கொண்டு வைத்தியசாலைகளுக்கும், பாடசாலைகளுக்கும் செல்கின்றார்கள் என்று கூறுகின்ற ஹெல உருமய இது ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என குற்றம் சுமத்துகின்றனர்.
ஒவ்வொரு இனமும் தங்களது கலாசார உடைகளை அணிவதற்கு உரிமை உண்டு. இதை பயங்கரவாத செயல் என்றோ அல்லது கலாசார சீரழிவன்றோ கூறமுடியாது. இதை நினைத்து முஸ்லிம் சமூகம் வேதனையடைகிறது என்றும் அவர் அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தார்.
அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறையில் ஹர்த்தால்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 05:55.13 AM GMT ]
குறிப்பாக கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த ஹர்த்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள், கடைகள் எவையும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.
இப்பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் கடைகளை திறந்து வைப்பதற்கான தீவிர முயற்சிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten