[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:45.09 AM GMT ]
இலங்கைக்கு எதிராக அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அரசியல் லாபத்தை அடிப்படையாக கொண்டது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் உதவி பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகள் என்பன உரிய தரத்தில் காணப்படுகின்ற போதும், அமெரிக்காவினால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இது முற்றுமுழுதாக அரசியல் நோக்க அடிப்படையில் கொணரப்பட்டது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில வெளிநாட்டு சக்திகள் இலங்கையை தொடர்ந்தும் அடிமைப்படுத்த முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுபல சேனாவிற்கு எதிராக கருத்து வெளியிடவில்லை!- ஆயர் ரெய்மன்ட் கிங்ஸ்லி
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:30.16 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தமது பெயரில் நேற்று வெளியாகி இருந்த செய்தியை காலி மாவட்ட கத்தோலிக்க ஆயர் ரெய்மெண்ட் கிங்ஸ்லி விக்ரமசிங்க மறுத்துள்ளார்.
இலங்கையில் பௌத்த தலிபான் இயக்கம் ஒன்று இயங்குவதாகவும், பொது பலசேனா போன்ற அமைப்புகளால் இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் முறுகல் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்ததாக நேற்றைய தினம் இணையத்தளங்கள் செய்தி வெளியாகி இருந்தது.
எனினும் இதனை மறுத்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தாம் இவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் இந்த செய்தி திரிபு படுத்தப்பட்டு பரப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
Geen opmerkingen:
Een reactie posten