தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை!


அரச நிர்வாகத்துக்குள்ளும் தந்தை- மகன் உறவு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 01:45.00 AM GMT ]
அரசு வேறு அரசாங்கம் வேறு என்பது அனைவருக்கும் தெரியும். இந்தநிலையில் அரசாங்கத்தில் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த தந்தை- மகன் உறவு அரச நிர்வாகத்துக்குள்ளும் வியாபித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் துறைமுக மற்றும் கப்பல்துறை மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள், அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை பயன்படுத்தி பேசினர்.
எனினும் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் வழமையாக பயன்படுத்தும் விசேட ஒலிவாங்கியின் முன்னால் இருந்து தமது உரையை நிகழ்த்தியுள்ளார்.
இது அரசாங்கத்தின் பதவி வரம்புகளுக்கு எதிரான செயல் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 11:28.49 AM GMT ]
இலங்கை அகதிகள் தொடர்பிலான செயற்பாடுகளின் போது, சர்வதேச மன்னிப்பு சபையினால், கடந்த வாரம் விடுக்கப்பட்டிருந்த அறிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
பாலித் திட்டத்தின் கீழ் அகதிகள் விடயத்தை முகாமைத்துவம் செய்வது குறித்து கலந்தாலோசிப்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரென்டன் ஓ கோனர் இலங்கை வந்திருந்தார்.
அவர் தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய நிலையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அகதிகளை பலாத்காரமாகவோ நாடுகடத்தும் போது, மன்னிப்பு சபையின் இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கையை அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று அந்த பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மாநாட்டை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பப்புவா நியுகினியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக பப்புவா நியுகினியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியுகினியாவின் அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை முன்னெடுக்கப்படுகின்ற மீளமைப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் வரவேற்றிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten