[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 12:29.45 AM GMT ]
ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விரட்டி விட்டு அவர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இலங்கை படையினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
அனைத்துப் பயிர்களும் நன்கு செழித்து வளரத்தக்க வளம்மிக்க, இந்த நிலங்களை நம்பி வாழ்ந்த வலி. வடக்கு மக்களை நடுத்தெருவுக்கு அனுப்பிவிட்டு, இலங்கை இராணுவத்தினர் அங்கு விவசாயம் செய்து அந்த உற்பத்திகளை தமிழ் மக்களிடமே விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர்.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் விவசாயம் மேற்கொள்ளும் இலங்கைப் படையினருக்கு நவீன விவசாய உத்திகளை அறிமுகப்படுத்துவதற்காக, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில், இலங்கை இராணுவத்தின் விவசாயப் பிரிவு பணிப்பாளர் கேணல் புத்திக குணரத்ன தலைமையிலான குழுவொன்று அண்மையில் எகிப்துக்கு அனுப்பட்டிருந்தது.
இந்தக் குழு திரும்பி வந்து, எகிப்தில் கையாளப்படும் நவீன முறையிலான தூவல் நீர்ப்பாசன முறையை இலங்கை இராணுவத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 11:50.12 AM GMT ]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாரிய வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பது, இலங்கைக்கு மாத்திரம் இன்றி, இந்தியாவுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அவர் தெரிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இதற்கு மாறாக அதிகாரம் உள்ள தலைவர்களில் உரிய அரசியல் தீர்வு ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்க வெண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக உள்ள நிலையில், அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இந்தியாவில் வட பிராந்தியத்திற்கு செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பௌத்த வெளிநாட்டு பயணிகள் செயல்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் இருந்து புத்தகாயா வாரணாசி போன்ற மத வழிபாட்டு பிரதேசங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, இலங்கையில் இருந்து செல்லும் பௌத்த யாத்திரீகர்கள் தற்போது கொழும்பில் இருந்து நேரடியாக புது டெல்கிக்கு விமானம் மூலமே செல்வதாக தெரிவித்துள்ளன.
அத்துடன், அதற்கு தற்போது சுமார் இலங்கை நாணயத்தில், 37 ஆயிரம் ரூபாவினை அவர்கள்செலவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகவே நேரடியாக விமான் மூலம் அவர்கள் செல்கின்றனர்.
முன்னர் கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து புகையிரத மார்க்கமாக இந்திய வட பிராந்தியத்திற்கு யாத்திரீகர்கள் சென்றனர்.
அதற்காக அவர்கள் 17 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ரூபா வரையிலேயே செலவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten